மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து அவள் உண்மை பேசினாலும்… இவர்கள் உண்மைக்கு மாறானவர்களே!

Published:

christian school killed a girl - 2026

-> சரவணபிரசாத் பாலசுப்ரமணியம்

நாட்டிலேயே ஏன் இந்த உலகத்திலேயே ஒரு மரண வாக்குமூலத்தை தவறு என்று நிரூபித்து குற்றவாளிகள் சர்வசாதாரணமாக கைவீசி நடக்க போகிறார்கள் என்கிற அவமானம் நமது மாநிலத்தை தான் சேரும் என்பதில் மெத்தை பெருமிதம் அடைவோம்.

பாதிக்கப்பட்டவர்களின் மிகப்பெரிய ஆயுதம் எனக் கூறப்படுவது மரண வாக்குமூலம். எப்பேர்பட்ட டிஎன்ஏ ஆதாரத்தை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாத நமது நீதிமன்றங்கள் மரண வாக்குமூலத்தை மிகப் பெரிதாக எடுத்துக் கொள்ளும். ஆனால் அப்பேர்ப்பட்ட ஒரு மரண வாக்குமூலத்தையே தவறு என்று இன்று கூறிவிட்டார்கள் நமது மாநில காவல்துறை.

இது எவ்வளவு பெரிய தவறான முன்னுதாரணத்தை கொண்டு வந்து நிறுத்துகிறது என்பது அவர்கள் அறிவார்களா என்று தெரியவில்லை. இதையே பல மாநில போலீசார்கள் தொடர்ந்தார்கள் என்றால் இனி இந்த மரண வாக்குமூலம் என்பதே ஒரு செல்லாக்காசு ஆகிவிடும்.

அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இந்தப் பெண்ணை மட்டும் அந்த ஹாஸ்டலில் தங்க வைத்தது ஏன் என்பதற்கு ஏதாவது விளக்கம் கொடுத்தார்களா??

வெறும் ஹாஸ்டல் கணக்கை பார்க்க சொன்னதாலேயே அவ்வளவு நன்றாக படிக்கக்கூடிய பெண் ஒரு மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயல்வாளா??

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

அவர்களின் தாய் தந்தையர்களும் கூறுகிறார்கள் அவர்களை மதம் மாற்ற சொல்லி கட்டாயப் படுத்தினார்கள் என்று ஆனால் அதற்கான முகாந்திரம் இல்லை என்று மாநில போலீசார் கூறுகிறார்கள்.

இதை ஏதோ சாதாரணமாக ஒரு ஹிந்து பெண்ணை மதமாற்ற சொன்னார்கள் முடியாது என்றவள் இறந்துவிட்டாள் என்று மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அந்தப் பெண்ணின் பத்தாவது மதிப்பெண்ணை பாருங்கள். கிட்டத்தட்ட 95 சதவீதம் மார்க் எடுத்திருக்கிறாள். தற்போது பிளஸ் டூ இருக்கும் மிகச் சிறப்பாக தயாராகிக் கொண்டிருந்தாள்.

இந்த மதமாற்ற பேய்களை பொருத்தவரை இப்படி நன்றாக படிப்பவர்களை தமது மதத்திற்கு மாற்றி விட்டால் அதற்கான பலனை அறுவடை செய்யலாம் என்று தான் பார்த்து இருப்பார்களே ஒழிய வேறு எந்த நல்ல எண்ணமும் இருந்திருக்காது.

இதற்கு இன்னொரு காரணத்தையும் நாம் ஆராயவேண்டும் அது அந்தப் பெண்ணின் வறுமை. இப்படி வறுமையில் கஷ்டப்பட்டு படிக்கும் ஹிந்து மாணவர்களை மாநிலமெங்கும் சல்லடை போட்டு தேடிச்சென்று உதவ வேண்டிய கட்டாயத்தில் நமது மதம் நிற்கிறது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இதற்கு ஒரு கட்சியோ இயக்கமோ தனித்து முடிவெடுத்துச் செயல்பட முடியாது. இது ஒவ்வொரு ஹிந்துவுக்கும் உள்ள கடமை. உங்கள் நட்பு வளையத்திலோ அல்லது சுற்றுவட்டாரத்தில், அக்கம்பக்கத்தில் கண்டிப்பாக ஏதாவது ஒரு ஹிந்து மாணவ மாணவிகள் படிப்பதற்கு கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். அவர்கள் நன்றாக படிப்பவர்கள் ஆகவும் இருப்பார்கள்.

அவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு நமது முழு ஆதரவையும் தர வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வறுமையை பயன்படுத்தி அவர்களுக்கு படிப்பு தருகிறோம் என்று சொல்லிக் கொடுத்து அவர்களை மதம் மாற்றிக் கொண்டிருப்பார்கள்?? நாமும் மாங்காய் மடையர்கள் போல அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்போம்??

ஒரு ஹிந்து குடும்பம் இன்னொரு ஒரு ஹிந்து மாணவர்களின் படிப்பு செலவை கட்டாயமாக ஏற்க வேண்டும். அப்படி அவர்கள் ஒன்றும் பெரிய பள்ளிக்கூடத்தில் பெரிய சம்பளத்தில் படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படி வறுமையில் வாடுபவர்கள் கூடுமானவரை அரசாங்கப் பள்ளியில் தான் படிப்பார்கள்.

அப்படி அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறிய தொகையையாவது வருடத்திற்கு கட்டக்கூடிய நிலையில் நடுநிலை ஹிந்துக்கள் இருப்பார்கள்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

அப்படி ஒவ்வொரு ஹிந்துவும் இப்படி படிக்க முடியாத ஏதாவது ஒரு மாணவ மாணவியர் படிப்புக்காக சங்கல்பம் எடுத்து பணிபுரிந்தால் இந்த மதமாற்ற பேய்களை மெதுவாக இந்த நாட்டை விட்டு விரட்டி விடலாம்.

இன்றே உங்கள் வட்டத்தில் இருக்கும் இது போல ஹிந்து மாணவ மாணவிகளை தேடி அடையாளப்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களால் முடியவில்லை என்றால் நீங்களும் உங்கள் நட்புகளும் இணைந்து அது நான்கைந்து பேரோ அல்லது 10 பேரோ அனைவரும் கைகோர்த்து அந்த மாணவ மாணவிகளை படிக்க வையுங்கள். பிறகு பார்ப்போம் எப்படி இந்த மதமாற்ற பேய்கள் வறுமையைக் காரணம் காட்டி உள்ள கால் வைப்பார்கள் என்று!

Related articles

Recent articles

spot_img