January 19, 2025, 8:39 AM
23.5 C
Chennai

MODI ONCE MORE 2024: தமிழ்நாட்டப் பத்தி மோடிக்கு என்ன தெரியும்?

ஜான்சன் vs ஜானகிராமன்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஜான்சன் – வணக்கம் ஜானகிராமா …

ஜானகி – வணக்கம் ஜானி

ஜான்சன் – என்ன உங்க மோடா பாய் வரல போல

ஜானகி – அது என்ன மோடா பாய்? மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அப்படீன்னு சொல்லு.

ஜான்சன் – சரி … சரி உள்துறை அமைச்சர் … ஏன் நமக்கு தமிழ்நாட்டுல எப்படியிருந்தாலும் தோல்விதான் … எதுக்கு போவானேன் அப்படீன்னு தான வரல …

ஜானகி – இல்ல ஜான்சன் அவருக்கு நிறைய பணிகள் இருந்திருக்கும்.

ஜான்சன் – ஆனா உங்க பிரதமர் மட்டும் சும்மா சும்மா வந்துட்டுப் போறாரு … எலக்ஷன் வறதாலதான …

ஜானகி – அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமா வராறு … தென் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் வருகிறார்.

ஜான்சன் – வந்து என்ன பிரயோஜனம் ?

ஜானகி – என்ன அப்படி சொல்லிட்ட இந்த வருஷம் ஜனவரி மாதம் அவர் திருச்சி வந்தார். ரூ.20,000 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் துறை போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

ஜான்சன் – ஆனா … இவங்க எல்லோரும் இந்தியை தமிழ்நாட்டுல திணிக்கிறவங்கதானே …

ஜானகி – என்ன அப்படி சொல்லிட்ட … பிரதமர் போற இடத்தில் எல்லாம் தமிழின் பெருமை பற்றிப் பேசுகிறார். தமிழ்நாடு இந்தியாவின் செழிப்பு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். தொன்மையான தமிழ் மொழியின் தாயகம் தமிழ்நாடு, அது பண்பாட்டு பாரம்பரியத்தின் பொக்கிஷம் என்று கூறுகிறார். தமிழ் மொழியில் அற்புதமான இலக்கியங்களை உருவாக்கிய திருவள்ளுவர் மற்றும் சுப்பிரமணிய பாரதி ஆகியோரை நினைவுகூருகிறார்.

ALSO READ:  வங்கதேசத்தில் இந்து சந்யாசி கைது; இந்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜான்சன் – பிரதமருக்கு தமிழ்நாட்டப் பற்றி என்ன தெரியும்?

ஜானகி – திருச்சியில் அவர் பேசும்போது திருச்சிராப்பள்ளியின் வளமான பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். பல்லவர், சோழர், பாண்டியர் மற்றும் நாயக்கர் வம்சங்களின் நல்லாட்சி மாதிரிகளின் மிச்சங்களை திருச்சியில் காண்பதாகக் கூறினார். தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி குறிப்பிடத் தவறுவதில்லை என அவர் கூறினார். “நாட்டின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில் தமிழ் கலாச்சார உத்வேகத்தின் பங்களிப்பு தொடர்ந்து விரிவடைவதாக நான் நம்புகிறேன்”, என்று அவர் கூறினார். புதிய நாடாளுமன்றம், காசித் தமிழ், காசி சௌராஷ்டிர சங்கமம், புனிதமான செங்கோல் நிறுவப்பட்ட முயற்சிகள் நாடு முழுவதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வழிவகுத்த முயற்சிகள் என்று பலவற்றை அவர்  சுட்டிக்காட்டினார்.

ஜான்சன் – தமிழகத்தின் மீது அவருக்கு ஏன் அவ்வளவு அக்கறை?

ஜானகி – மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியில் பிரதிபலிக்கும் என்ற அரசின் அணுகுமுறையைப் பிரதமர் நம்புகிறார். மத்திய அரசின் 40-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் கடந்த ஓராண்டில் 400-க்கும் மேற்பட்ட முறை தமிழகம் வந்துள்ளனர். “தமிழ்நாட்டின் முன்னேற்றத்தால் இந்தியா முன்னேறும்” என்று மோதி அவர்கள் எப்போதும் குறிப்பிடுகிறார்.

ALSO READ:  கேரள கழிவுகள் தென்தமிழகத்தில்! விடியல் அரசின் பரிதாபங்கள்!

ஜான்சன் – திருச்சி விமான நிலையத்தால ஏழைகளுக்கு என்ன பயன்?

ஜானகி – திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம், விமான நிலையத்தின் திறனை மூன்று மடங்கு அதிகரிக்கும். கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் பிற பகுதிகளுடனான இணைப்பை வலுப்படுத்தும். புதிய முனையக் கட்டிடத்தின் திறப்பு விழா முதலீடுகள், வணிகங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலாவுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். உயர்த்தப்பட்ட சாலை மூலம் விமான நிலையத்தை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைப்பதை அதிகரித்ததையும் அவர் குறிப்பிட்டார். திருச்சி விமான நிலையம் அதன் உள்கட்டமைப்புடன் அங்கே உள்ள ஓவியங்கள் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும்.

ஜான்சன் – திருச்சில வெறும் விமான நிலையம் பற்றித்தான் பேசினாரா? இல்லை வேறு ஏதாவது சொன்னாரா?

ஜானகி – ஐந்து புதிய ரயில்வே திட்டங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அவை தொழில் மற்றும் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று கூறினார். ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம் மற்றும் வேலூர் போன்ற முக்கிய நம்பிக்கை மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்கும் வகையில்  புதிய சாலைத் திட்டங்கள் அமையும் என்றும் சொன்னார்.

          கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பிரதமர் பேசினார். கடலோரப் பகுதிகளையும் மீனவர்களின் வாழ்க்கையையும் மாற்றுவதற்கான திட்டங்களைக் குறிப்பிட்டார். மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் மற்றும் பட்ஜெட், மீனவர்களுக்கான வேளாண் கடன் அட்டை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான படகு நவீனமயமாக்கலுக்கான உதவி மற்றும் பிரதமர் மத்ஸ்ய சம்படா திட்டம்  ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.

ALSO READ:  விருதுநகரிலும்... ‘யார் அந்த சார்?’ ஸ்டிக்கர்ஸ்!

          சாகர்மாலா திட்டத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

ஜான்சன் – சாகர் மாலா அது என்ன?

ஜானகி – நாட்டில் உள்ள துறைமுகங்கள் இத்திட்டத்தின்படி  மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் துறைமுகங்கள் சிறந்த சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தின் திறன் மற்றும் கப்பல்களின் செயல்திறன் கணிசமாக மேம்பட்டுள்ளன. இப்போதே காமராஜர் துறைமுகத்தின் திறன் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஜான்சன் – நீ சொல்றதைப் பாத்தா ஒன்றிய அரசு, அதான் உங்க மத்திய அரசு தமிழகத்திற்கு நிறைய செஞ்சிருக்கு அப்படீங்கற …

ஜானகி – தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த வரலாறு காணாத செலவு செய்திருக்கிறது. 2014-க்கு முந்தைய பத்தாண்டுகளில் மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடியும், கடந்த 10 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடியும் வழங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளை விட இந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கும் 2.5 மடங்கு கூடுதல் நிதி கிடைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, மாநிலத்தில் மூன்று மடங்கும், ரயில்வே துறையில் 2.5 மடங்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச ரேஷன், மருத்துவ சிகிச்சை மற்றும் பக்கா வீடுகள், கழிப்பறைகள் மற்றும் குழாய் நீர் போன்ற வசதிகளைப் பெற்று வருகின்றன.

ஜான்சன் – மொத்தத்துல என்ன சொல்ல வர?

ஜானகி – மீண்டும் மோதி வேண்டும் மோதி

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.