— ந. முத்துராமலிங்கம் —
ஹிந்துதர்மம் மிகப்பெரிய ஆலமரம் இதில் சங்கரர், பரமஹம்ஸர், விவேகானந்தர், போன்ற பலர் விழுதுகள், காலப்போக்கில் அந்த விழுதுகள் பட்டுப்போகும், ஆனால் ஆலமரம் வலுவாக நிற்க புதிய விழுதுகள் தோன்றிக்கொண்டே இருக்கும் மோடி போல, யோகி போல –
ஆனால், நித்தியில் தொடங்கி இன்று அண்ணபூரனி வரை, தெருவிற்குத்தெரு முளைத்திருக்கும் சாமியார்கள், குறிசொல்பவர்கள் எல்லாம் அந்த ஆலமரத்தைச் சாய்க்க உதவும் களைகள் –
பங்காரு, சக்குரு ஜக்கி போன்றவர்கள் அந்த ஆலமரத்திற்கு உயிர் சக்தியை சூரியனிடமிருந்து ஈர்த்துக் கொடுக்கும் இலைகள்-
விழுதுகளாலும், இலைகளாலும் அந்த மரத்திற்கு நன்மை உண்டு ஆனால், களைகளால் என்றும் நன்மை இல்லை மாறாகத் தீமைதான் அதிகமாகும் –
ஆனால், இங்கே நான் பார்க்கிறேன் இந்தக் களைகளையும் ஆதரிக்கும் பல பல காவிகளை-
அவர்களை நான் குற்றம் சொல்லமாட்டேன், அதீத ஹிந்து பக்தி அவர்களை அப்படிச் சிந்திக்க வைக்கிறது, அதாவது அண்ணபூரனி யாராக இருந்தால் என்ன அவரும் ஹிந்துக்களையும் , பிற மதத்தவரையும் கவர்கிறாரே, மதமாற்றத்தைக் தடுக்கிறாரே என்று –
நித்தி பல மதத்தவரை மதம்மாற்றி வருகிறாரே என்று_
அதனால், அவர்கள் என்ன செய்தாலும் தவறில்லையா? என்று நான் கேட்கிறேன் –
ஹிந்துதர்மத்தில் இவர்களைப் போல லட்சக்கணக்கான களைகள் இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள், ஆனால், இவர்களைப் பகுத்தறிய முடியாத, முயலாத அப்பாவி ஹிந்துக்களால்தான் இன்று ஹிந்துதர்மம் ஹீணஸ்தாதியில் இருக்கிறது – ஆனால், அழிந்துவிடாது!
பகவத்கீதையில் பகவான் கூறுகிறார் – யோகத்தை அறிந்தவன் தன்னை வெளிப்படுத்த மாட்டான் என்று!
ஆக, அரைகுறைகள்தான் தாங்கள் அற்புதங்களை நிகழ்த்துவதாகவும், நோய்களையும், கஷ்டங்களையும் தீர்ப்பதாகவும் அப்பாவிகளை நம்பவைத்து அருள்வாக்கு கூறுவார்கள் –
அஷ்டமாசித்துக்களை அறிந்த சித்தன் உங்கள் கண்களில் தென்படவே மாட்டான், யோகப்பயிற்சியில் ஒன்றிரண்டு சித்துக்களைக் கற்றுக் கொண்ட அரைகுறை சித்தன் மட்டுமே உங்கள் முன்பு வாயிலிருந்து லிங்கத்தைத் தருவிக்கிறேன், உங்கள் வியாதிகளைக் குணமாக்குகிறேன் என்று கூறி கல்லாவை நிரப்புவான் –
பெரியார் சொன்ன பகுத்தறிவப் பத்தி நான் ஒன்றும் கூறவில்லை ஹிந்துக்கள் இந்த உலகின் மிகப்பெரிய பகுத்தறிவாளர்கள் –
தயவுசெய்து, பகுத்தறிந்து பாருங்கள்- கர்மாவை வெல்லக்கூடிய சக்தி இந்த உலகத்திலேயே கிடையாது, பாவ புண்யங்கள்தான் உங்கள் ஆத்மாவின் அடுத்த ஜட உடலைத் தீர்மானிக்கிறது –
பாவ ஆத்மா பாவ உடலை அடைகிறான், புண்ணிய ஆத்மா புண்ணிய உடலை அடைகிறான் – கர்மாவைத் தவிர வேறெதும் உங்களை வழிநடத்த முடியாது –
தயவுசெய்து, நீங்கள் மன அமைதிக்காக அல்லது உங்கள் பிரச்சினைகளைக் கூறுவதற்காக கோவிலுக்குச் செல்லுங்கள் தவறில்லை அதனால் கெட்ட கர்மபலன் குறையும், ஆனால், கடவுளைவிட பூஜாரி பெரிதென்று எண்ணாதீர்கள் – உச்சபட்சமாக, தானே கடவுளின் அவதாரம் என்று பிதற்றும் பைத்தியக்காரன்களை நம்பாதீர்கள் –
பகவத்கீதை படியுங்கள் – சர்வம் கிருஷ்னார்ப்பணம்_
நான் மெத்தப்படித்தவனல்ல மக்களே என்னோட சிற்றவிற்க்கு எட்டிய விஷயங்களை எழுதுகிறேன் எல்லாத்தையும் கண்ண மூடிகிட்டு ஏத்துக்கனும்னு நான் வேண்டல –
முதல்ல நேத்துவரைக்கும் நமக்கெல்லாம் யார்னே தெரியாத ஒருத்தன எப்படித் தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆக்கினாங்க, நமக்குதான் யார்னு தெரியாது ஆனா ரெண்டு Schools_ல நிகழ்ச்சிய ஏற்பாடு செஞ்ச டீச்சர்ஸ்-க்குத் தெரியாதா? அனுமதி கொடுத்த DEO, CEO-க்களுக்குத் தெரியாதா? (இவனப்பத்தின வீடியோக்கள் சில வருஷமாவே இருந்திருக்கு)-
அடுத்ததா இவன் பேசினது ரெண்டு ஸ்கூல் ஒன்னு சைதாப்பேட்டைல இருக்கு, ரெண்டாவது அசோக்நகர்ல இருக்கு, ரெண்டுக்கும் இடைல நாலு கிலோமீட்டர் தூரம் (சென்னைல நாலு கிலோமீட்டர்ன்றது நம்ம ஊர்ல 40 கிலோமீட்டருக்குச் சமம்), இதுல எதுக்கு அந்தப் பிரச்சினை பண்ணின பார்வையற்ற ஆசியரியர் தனது சைதாப்பேட்டை பள்ளியிலிருந்து அசோக்நகர் பள்ளிக்கு வந்தார் என்பது முதல் கேள்வி-
அப்படியானால் இவன் கர்மா பற்றியும் மறுபிறப்பு பற்றியும் பேசுவான் என்று முன்பே தெரிந்து வந்தாரா? அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிந்தேதான் இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்தி அதில் மிகச்சரியாக ஒரு பார்வையற்ற ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து அதைப் பிரச்சினையாக்கி இவனுக்கு விளம்பரம் தருகிறார்களா? அதனால் இவர்களுக்கு என்ன பயன்?-
ஒரே கல்லில் ஒரு மாமரத்தையே சாய்க்கும் வல்லமை திராவிடத்திற்கும் அதன் தாய்க்கழமான மிஷநரிகளுக்கும் உண்டு –
முருகன் மாநாடு நடத்தியதாலும், கருணாநிதி நாணய வெளியீட்டு நிகழ்சியாலும் அதிர்ப்தியில் இருக்கும் சிறுபான்மையினரைக் குளிர்விக்க இதைத் திட்டமிட்டு ஒரு டூல்கிட்டாகவும் பயன்படுத்தியிருக்கலாம், நேற்று அன்பில் மகேஷிலிருந்து முதலமைச்சர் வரை பொங்கியதிலிந்து சிறுபான்மை மக்கள் மனம் நிச்சயம் குளிர்ந்திருக்கும்_
ஏனென்றால் இந்த திடீர் ஞானி இதற்கு முன்பு பல திமுக அமைச்சர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இருக்கின்றன, என்னைப் பொருத்தவரை எந்தவொரு ஆன்மீகவாதியும், சனாதனவாதியும் திமுகவினருடன் புகைப்படம் எடுப்பதை விரும்பமாட்டார்கள், ( நான் எடுத்ததில்லை), புகைப்படம் எடுத்ததாலேயே ஒருவனைச் சந்தேகிக்கலாமா என்று கேட்டால்? சத்தியமாகச் சந்தேகிக்கலாம், ஹிந்துதர்மத்தை நேசிப்பவனால் அதை அழிக்க நினைப்பவர்களுடன் பக்கத்தில் நிற்கக்கூட முடியாது என்பதுதான் உண்மை –
அடுத்ததாக, இவனைப் பிரபலப்படுத்துவதால் இவர்களுக்கு என்ன லாபம் என்றால்? அதுதான் மிஷநரிகளின் நூற்றாண்டுத் திட்டம், நாளை இவனை வைத்தே நமது தர்மத்தை அசிங்கப்படுத்துவார்கள், பாலியல் வழக்கில் கைது செய்து ஒரு ஆன்மீகப் பேச்சாளரின் யோக்கியதையைப் பாருங்கள் என்பார்கள், இவனும் அவற்றைப் பெருமையுடன் எதிர்கொள்வான் ஏனென்றால் இவன் காட்டில் மழை பொழிய ஆரம்பித்துவிட்டது –
இவனை இன்று சங்கி என்று நினைப்பவர்கள் நாளை உணர்வார்கள் –
தேசப்பணியில் என்றும்
ந.முத்துராமலிங்கம்