
வரவேற்ற அமெரிக்கா….
நம் இந்திய பிரதமரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை பலரும் எதிர்ப்பார்த்த தருணத்தில் அவர் பிரான்ஸ் வழியாக அமெரிக்கா சென்றார்.முன்னதாக பிரான்ஸில் நடைபெற்ற AI தொழில்நுட்ப பண்புகள் குறித்தான கருத்தரங்கில் அவர் தெரிவித்த கருத்துகள் பலராலும் சிலாகிக்கப்பட்டது.
சீனாவின் மென்பொருள் அசூர வளர்ச்சியை மேற்கோள் காட்டி அவர்களுடைய டீப் ஸீக் செயலியை அவரவர் தேவை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றம் செய்து பயன் படுத்தும் விதமாக செயல்படுத்த அல்லது அதற்கு மாற்றீடாக நம் தரப்பில் இருந்து முழு வீச்சில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றிருக்கிறார் அவர், என்கிறார்கள்.
இது முடிந்து அங்கேயே அதாவது பிரான்ஸிலேயே கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சையை சந்தித்து பேசினார்.
பிரான்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக பின்னர் பார்ப்போம்.
அங்கு இருந்து நேராக அமெரிக்கா சென்ற அவர் தற்போது உள்ள உலக அரசியல் சூழலை நன்கு அவதானித்து அதற்கேற்ப காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.அமெரிக்க புலனாய்வு துறைகளின் உச்ச பட்ச அதிகாரத்தில் நம் இந்திய வம்சாவளியை சேர்ந்த துல்சி கப்பார்டை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சமயத்தில் அவரை சந்தித்தார். இவரை இந்த பதவிக்கு கொண்டு வர பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். செனட் சபையில் பெரும்பான்மை பலம் பெற்ற போதிலும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இவரை தான் இந்த ஒட்டுமொத்த அமைப்பிற்கு தலைவராக கொண்டு வர ஒற்றை காலில் நின்றது, சாதித்தும் காட்டியது.
இது ஒரு புறம் இருக்க… இங்கு நம் இந்திய புலனாய்வு துறையினருக்கு ஒதுக்கும் நிதியில் இவ்வாண்டு பட்ஜெட்டில் முதல் முறையாக குறைத்து இருந்தார்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் கவனத்தில் கொண்டோம் என்பது தெரியவில்லை.
ஆக இது வெறுமனே சம்பிரதாய சந்திப்பு இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்..
அடுத்ததாக நம் இந்திய பிரதமர் விவேக் கணபதி ராமசாமியை அவருடைய மாமனாருடன் சேர்த்து சந்தித்தார். இவர் தான் அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் நின்றார். டொனால்ட் ட்ரம்ப்பிற்காக விட்டு விட்டு நகர்த்தும் சென்றார். கேட்காமலேயே இதனை செய்ததால் டொனால்ட் ட்ரம்ப் இவருக்கு மிக முக்கியமான பொறுப்பு கொடுத்திருக்கிறார்.
ஒட்டுமொத்த அமெரிக்க அரசாங்க அலுவலர்களை மறுசீரமைப்பு செய்யும் முக்கிய பணி அவருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான இடங்களில் பணியாளர்களை AI தொழில்நுட்ப பண்புகளை கொண்டு மாற்றீடு செய்யவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. இதனை அவர் எலான் மஸ்க் உடன் இணைந்து செய்ய பணிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக நம் இந்திய பிரதமர் எலான் மஸ்க்கை அவருடைய குடும்பத்தினருடன் சந்தித்தார். மிக நீண்ட நேர சந்திப்பு என்றால் அது இது தான் என்கிறார்கள். பின்னர் மஸ்க் அமெச்சு பணியாளர்களுடனும் சேர்ந்து இந்த பேச்சு வார்த்தை நீண்டது.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக்கேல் வால்ட்ஸ் மற்றும் அவர் குடும்பத்தினர் தான் நம் இந்திய பிரதமரை வரவேற்றிருந்தனர். நம் இந்திய சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வகிக்கும் பதவிக்கு இணையானது இந்த செயலர் பதவி.
கடந்த ட்ரம்ப் ஆட்சி காலத்தில் இந்த பதவியில் மைக் பாம்பியோ இருந்தார். டொனால்ட் ட்ரம்ப் மீது கைது நடவடிக்கைகளெல்லாம் நடந்த சமயத்தில் இவரை அடுத்த அதிபர் தேர்தலில் நிற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ட்ரம்பே அவற்றில் இருந்து மீண்டு வந்து அதிபர் தேர்தல் போட்டியில் கலந்து கொண்டு தற்போது அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கிறார். ஆனால் மைக் பாம்பியோ ஓரம் கட்டப்பட்டு விட்டார்.
டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பிற்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பங்களாதேஷ் குறித்தான கேள்விக்கு, அதாவது அங்கு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தில் அமெரிக்க பங்கு குறித்து நேரிடையாக ட்ரம்பிடம் கேள்வி கேட்க…. அதெல்லாம் இவர் பார்த்து கொள்வார் என நம் இந்திய பிரதமரை கை காண்பித்து சொன்னார் டொனால்ட் ட்ரம்ப்.
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னுமாப்போலே மொத்த அமெரிக்க விஜயமும் வெற்றியா தோல்வியா என்பது இதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டியது என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். அதில் விஷயம் இல்லாமல் இல்லை என்பது தான் சமாச்சாரமே.
— ஜெய் ஹிந்த். ஸ்ரீராம்
மோடிக்காக விலகிக் கொண்ட அமெரிக்கா!
வங்காளதேசத்தில் இருந்து மோடிக்காக அமெரிக்கா விலகிக் கொள்ளும் என்கிறார் டொனால்ட் ட்ரம்ப். மோடிக்காக வங்காளதேசத்தில் இருந்து விலகிக் கொள்கிறோம் என்று ட்ரம்ப் அறிவித்து மீண்டும் வங்காளதேசத்தை இந்தியாவின் கைக்குள் அடக்கி இருக்கிறார்.
ஒரு நாட்டின் அரசியலில் நுழைந்து அந்த நாட்டை தங்களின் அதிகாரத்தில் கொண்டு வந்த அமெரிக்கா, அந்த நாட்டில் இருந்து இன்னொரு நாட்டின் பிரதமருக்காக விட்டு விலகிக் கொள்கிறோம் என்று அறிவித்து இருப்பது அமெரிக்க வரலாற்றில் இதுதான் முதல் முறை..
வங்காளதேச ஆட்சி அரசியலில் இருந்து அமெரிக்கா மோடிக்காக விலகிக் கொள்ளும் என்று அறிவித்து இருக்கிறது. எந்தவித பஞ்சாயத்தும் இன்றி இனி
வங்காளதேசம் இந்தியாவிடம் சரண்டைந்து விடும்.
இந்த நேரத்தில் 1987ல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையின் அதிபர் ஜெயவர்தனாவை மிரட்ட இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கையை இந்தியாவிற்கு ஆதரவாகக் கொண்டு வர ராஜீவ் காந்தி என்கிற கோமாளி பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கையை நினைத்துப் பார்க்கிறேன்..
சிங்களர் தமிழர் பிரச்சனையை முன் வைத்து இலங்கைக்குச் சென்ற இந்திய ராணுவத்தை அதே சிங்களர்களும் தமிழர்களும் ஒன்று சேர்ந்து வெளியே போங்கள் இது எங்களுக்கு இடையே உள்ள பங்காளி சண்டை என்று கூறி இந்திய அமைதி காக்கும் படையை துரத்தி விட்டதை நினைவு கொள்கிறேன்.
ராஜீவ் காந்தியின் முட்டாள்தனத்தினால் இலங்கையில் இந்திய ராணுவம் நுழைந்து சுமார் 4000 வீரர்களை பலி கொடுத்து ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு படுகாயங்கள் இந்தியாவிற்கு ஆயிரக்கணக்கான கோடி பண இழப்பு. இதைவிட தமிழ்ப் பெண்களை இந்திய ராணுவம் கற்பழித்தது கொலை செய்தது என்று பழிபாவங்களைப் பெற்று இந்தியாவின் பெயர் உலக அளவில் நாறிப்போனது.
ராஜீவ் காந்தி என்கிற கோமாளி பிரதமர் தன்னுடைய வல்லமையைக் காட்ட இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி கேவலப்பட்டதையும் இப்பொழுது உள்ள வங்காளதேச பிரச்சனையையும் நினைத்துப் பார்க்கிறேன். அமெரிக்காவின் டீப் ஸ்டேட் பாலிடிக்சால் வங்காளதேச அரசியல் மாறி ஆட்சி மாற்றம் நிகழ்ந்து. இந்திய ஆதரவு பிரதமர் ஷேக் ஹசினாவை இந்தியாவிற்கு துரத்தி விட்டார்கள். அதற்கு பிறகு அமெரிக்க அடிமையான முகம்மது யூனிஸ் ஆட்சியில் வங்காளதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
இதனால் இந்துக்களைக் காப்பாற்ற வங்காளதேசத்திற்கு இந்திய ராணுவம் செல்ல வேண்டும் என்று ஏகப்பட்ட குரல்கள் இந்தியாவில் ஒலித்தது.
மோடியை நிறைய பேர் கிண்டல் செய்தார்கள்.மோடி ராஜீவ் காந்தி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பியது மாதிரி வங்காளதேசத்திற்கு இந்திய ராணுவத்தை அனுப்பி இருக்க முடியும். இதனால் என்ன விளைவுகள் நிகழும் என்பதை யாரும் அறிய முடியாது.
ஒரு வேளை 1990 ல் இலங்கையில் இருந்து இந்திய ராணுவம் அங்கு இருந்த ஏகப்பட்ட இழப்புகளுடன் கெட்ட பெயருட ன் துரத்தப்பட்ட வரலாறு மீண்டும் நிகழலாம்.
ஒரு பிரச்சனையை மோடி எந்த அளவிற்கு ஆராய்ந்து தீர்க்கிறார் என்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
வங்காளதேசத்தில் நுழைந்து அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து மிக அற்புதமாக வங்காளதேச பிரச்சனையை தீர்த்து வைத்து இருக்கிறார் மோடி.
— விஜயகுமார் அருணகிரி