December 5, 2025, 11:44 PM
26.6 C
Chennai

கிரிக்கெட் போட்டியில் வரும் ‘திருப்பம்’ போல்..!

annamalai in trichy meeting - 2025

அண்ணாமலை நீடிப்பாரா,
மாற்றப் படுவாரா?

— ஆர். வி. ஆர்

திமுக, அதிமுக-விலிருந்து ஆரம்பிக்கலாம்.

கருணாநிதியால் திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்ட எம். ஜி. ஆர், திமுக-வுக்குப் போட்டியாக ஆரம்பித்த கட்சி, அதிமுக. அந்த இரு தலைவர்களும் இன்று இல்லை. ஆனால் அந்த இரண்டு கட்சிகளும் ஒரே இயல்பு கொண்டவை. ஒரு கட்சியில் ஹிந்து விரோதப் பேச்சு இருக்கும், அராஜகப் போக்கும் காணப்படும். இன்னொரு கட்சியில் அவை இருக்காது. மற்றபடி, தங்கள் நலன்களை நன்றாகக் கவனித்துக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்யும் தலைவர்கள்தான் இரண்டு கட்சிகளிலும் இருக்கிறார்கள்.

1967 தேர்தலில் திமுக-வால் மாநிலத்தில் வீழ்த்தப்பட்ட காங்கிரஸ் சென்ற பல வருடங்களாகத் திமுக-வின் காலடியில் கிடக்கிறது, திமுக-வை எதிர்த்து மறுபடியும் ஆட்சியில் அமரக் காங்கிரஸ் முனையவில்லை. திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் மட்டும் மாறி மாறித் தமிழகத்தில் 1967-லிருந்து ஆட்சி செய்கின்றன.

தமிழகத்திற்கு நல்லாட்சி கிடைக்க, இப்போது நடக்கவேண்டிய முதல் காரியம் இது. அதாவது, ஆட்சியில் இருக்கும் திமுக கூட்டணியை 2026 சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அது முடியாவிட்டால், அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகக் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையில் மட்டும் ஜெயிக்கும் வகையில் எதிரணியின் உறுப்பினர் எண்ணிக்கை உயரவேண்டும். அதன் மூலம், திமுக-வுக்கு எதிரான மக்கள் சக்தி திரண்டு வருகிறது என்கிற செய்தியை திமுக-வுக்கு உரத்துச் சொல்லி, 2031 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப் பட்டு, பாஜக முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்.

வருகின்ற 2026 சட்டசபைத் தேர்தலில், திமுக-வுக்கு வலுவான எதிர்ப்பை எந்தக் கட்சியின் தலைவர் மக்களிடையே காண்பிக்க முடியும்? சீமான் அவர் பாணியில் திமுக-வை எதிர்க்கிறார், விஜய்யும் அவர் பாணியில் எதிர்க்கிறார். ஆனால் இந்த இருவரும் தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கான போக்கும் தகுதியும் கொண்டவர்கள் அல்ல. இந்த இரு தலைவர்களும் பாஜக-வின் தேசிய சிந்தனை துளியும் இல்லாதவர்கள். இந்த இருவரும் பாஜக-வுடன் ஒரு கூட்டணியில் இணைந்து திமுக-வை எதிர்க்க முன் வருவது சந்தேகம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, திமுக-வை எதிர்க்கும் முக்கியக் கட்சியாக இருக்கிறது. ஆனால், சீமானுக்கோ விஜய்க்கோ உள்ள தனிப்பட்ட வாக்காளர் பின்புலம் பழனிசாமிக்கு இல்லை, அவர் கட்சியில் மற்ற தலைவர்களுக்கும் கிடையாது. இருந்தாலும் எம்.ஜி.ஆர் பிரபலப் படுத்திய இரட்டை இலை சின்னம் இன்றும் அதிமுக-வின் கணிசமான வாக்கு வங்கிக்குக் காரணமாக இருக்கிறது – அது குறைந்து வந்தாலும்.

இந்தச் சூழ்நிலையில், பாஜக-வின் திமுக எதிர்ப்புக்கும் மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அதற்குக் காரணம் பாஜக என்ற கட்சி ஸ்தாபனம் அல்ல. மோடி, அமித் ஷா போன்ற கட்சியின் தேசியத் தலைவர்களும் காரணம் அல்ல. அண்ணாமலை தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவர் ஆவதற்கு முன்பிருந்த மாநிலத் தலைவர்களோ, அல்லது கட்சியின் பிற மூத்த தலைவர்களோ காரணம் அல்ல.

யார் மீதும் குறை சொல்லாமல் ஒரு உண்மையை நாம் அறியலாம். அதாவது, அண்ணாமலை கட்சியின் மாநிலத் தலைவர் ஆன பின்பு அவருடைய பேச்சினால், செயலினால், துணிவினால், மன உறுதியினால், அர்ப்பணிப்பால், தலைமைப் பண்பினால், வார்த்தைகளால் எளிதில் விளக்க முடியாத அவரது அம்சத்தால், அவர் இன்று தமிழகத்தில் திமுக-வின் முக்கிய எதிர்ப்பு முகமாக – அதாவது, பிரதானமாகத் திமுக-வை எதிர்க்கும் ஒரு குரலாக – பார்க்கப் படுகிறார். திமுக-வே அப்படி நினைக்கும். அதை வைத்து பாஜக தமிழகத்தில் ஒரு சக்தி மிக்க தேர்தல் கூட்டணியை உருவாக்க வேண்டும். அதை பாஜக முனைகிறது.

இப்படி இருக்கையில், 2026 தேர்தல் சமயத்தில் அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராக இல்லாமல் போகலாம், ஒரு கட்சிக் கோட்பாட்டினால் – அல்லது ஒரு அரசியல் யுக்தியாக – அவர் இப்போது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் படலாம் என்ற பேச்சு பரவலாக எழுகிறது. அது நடந்தால் என்ன ஆகும்? பாஜக-வின் திமுக எதிர்ப்பானது முனை மழுங்கும்.

திமுக, மிக ஆக்ரோஷமாகப் பந்து வீசும் கிரிக்கெட் பவுலர்கள் மாதிரி. அவர்களைத் திறமையாக எதிர் கொண்டு, வரும் பந்துகளை ஃபோர், சிக்சர் என்று திறமையாக அடித்து விளையாடி பவுலர்களைச் சோர்வடையச் செய்யும் ஒரு பேட்ஸ்மேன் எதிரிலுள்ள பாஜக அணிக்குத் தேவை. அதை அண்ணாமலை செய்ய முடியும் என்றால் அவரை ஆடுகளத்தில் இருக்கச் செய்வது நல்லது. நமது அணியில் மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அல்லது வேறு காரணத்திற்காக, அண்ணாமலையை இந்த மேட்சில் ஆடுகளத்துக்கு அனுப்பாமல் இருப்பது நமக்கு வெற்றி தருமா?

மற்ற பேட்ஸ்மேன்களால் மூர்க்கமான பவுலர்கள் வீசும் பந்துகளை ஆட்டமிழக்காமல் அடித்து ஆட முடியாது, அவ்வப்போது ஒன்று, இரண்டு ரன்கள் மட்டும் எடுக்க முடியும், மற்ற எல்லாப் பந்துகளையும் டொக்கு டொக்கு என்று ஆடுவார்கள் என்றால் அவர்களால் பெரிய பயன் உண்டா?

தமிழகத்தில் பாஜக-வின் மூத்த தலைவர்கள் பலரையும் தாண்டி, கட்சிக்கே புதியவரான அண்ணாமலையை எதற்காகக் கட்சியின் தேசியத் தலைமை 2021-ம் ஆண்டு தமிழகத்தின் மாநிலத் தலைவர் ஆக்கியது? ஏனென்றால், தமிழகத்தின் திராவிட அரசியல் களம் வினோதமானது, கொடுமையானது. மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக-வை அண்ணாமலையால் மற்ற பாஜக தலைவர்களை விடப் பலமாக எதிர்க்க முடியும், அதற்கான குணாதிசயங்கள் அவரிடம் தெரிகின்றன, என்ற கணிப்பில், எதிர்பார்ப்பில். அந்தக் கணிப்பை, அந்த எதிர்பார்ப்பை, அவர் 2021 ஜூலை மாதத்திலிருந்து நிரூபித்து வருகிறார். அப்படியானால் 2026 சட்டசபைத் தேர்தல் வருவதற்கு முன் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப் பட்டால், அது கட்சிக்கு நன்மை செய்யுமா?

பாஜக என்ற அதிசயக் கட்சியும், மோடி என்ற அற்புதத் தலைவரும், தமிழகத்தில் திமுக-வுக்கு எதிராக மக்களைத் திருப்ப முடியவில்லை. அண்ணாமலையால் அது சிறிதளவாவது முடிந்திருக்கிறது. இப்போது அவரை மாநிலத் தலைவர் பதவியலிருந்து நீக்கினால், கட்சியின் மகிமையும் மோடியின் நற்பெயரும் தமிழக பாஜக-வைத் தூக்கி நிறுத்தாதே? அவர் மாநிலத் தலைவராக இல்லாவிட்டால், அவரால் பாஜக-வுக்கு ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள் 2026-ல் பாஜக-வுக்கு வாக்களிப்பார்களா என்பதும் ஒரு கேள்வி.

‘அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் தனது மாநிலப் பணிகளைத் தொடர்ந்து செய்வார், அதில் பாதகம் ஏற்படாது’ என்று எண்ணினால் அதில் சாரமில்லை.

அண்ணாமலை மாநிலத் தலைவராகத் தொடராவிட்டால், முன் போல் அவரால் பத்திரிகையாளர் சந்திப்புகளை அடிக்கடி நடத்த முடியுமா? புதிய தலைவரைத் தவிர்த்து அவரே திமுக-வுக்குப் பதிலடிகள் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அது முடியும், முன் போல் அவர் அதே வெளிச்சத்தில் இருப்பார் என்றால், புதிய மாநிலத் தலைவர் எதற்கு?

இன்னொன்று. ‘2026 சட்டசபைத் தேர்தலின் போது அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்து அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி தோற்றால், அது அண்ணாமலைக்குப் பின்னடைவாகும். அதனால் இப்போது அண்ணாமலையை வேறு கட்சிப் பணியில் அல்லது மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, 2031 தமிழக சட்டசபைத் தேர்தல் நேரத்தில் அவரை மீண்டும் தமிழக மாநிலத் தலைவர் ஆக்கலாம்’ என்ற ஒரு யோசனையும் காற்றில் வருகிறது.

அண்ணாமலை நல்ல பேட்ஸ்மேன் என்று தெரிந்தும், மூர்க்கமாகப் பந்து வீசும் எதிர் அணி விளையாடும் இந்த மேட்சில் அவரை இறக்காமல், அடுத்த மேட்சுக்கு அவர் வரட்டும் என்பது ஒரு யுக்தியாகுமா?

நமக்குத் தெரிந்தது இது. கிரிக்கெட்டில் ஏதாவது திருப்பம் வருமா, அல்லது ஒன்றும் வராதா, என்று தெரியாது. நாம் என்ன செய்யலாம்? மேட்ச் பார்க்கலாம். செய்வோம்.

Author: R. Veera Raghavan -Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories