December 5, 2025, 9:23 PM
26.6 C
Chennai

பஹல்காம் சம்பவம்! பாடம் கற்குமா இந்தியா?

kashmir bahalkam terrorist attack - 2025

— ஆர். வி. ஆர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு சுற்றுலாத் தலம், பஹல்காம்.

மூன்று வாரம் முன் நமது நாட்டின் ஹிந்து சுற்றுலாப் பயணிகள் பலர் பஹல்காமில் பரவி இருந்தனர். அது வெட்ட வெளி, பகல் நேரம். அப்போது நான்கு முஸ்லிம் பயங்கரவாதிகள் அந்த மக்களை அணுகி, அவர்களிடம் பேசி, அவர்கள் ஹிந்துக்கள் என்பதை ஊர்ஜிதம் செய்து அவர்களில் 24 ஆண்களை சுட்டுக் கொன்றனர். பலியானவர்கள் இந்தியாவின் 14 மாநிலங்களைச் சார்ந்தவர்கள். ஒரு நேபாளி ஹிந்து சுற்றுலாப் பயணியும் அவ்விதம் மாண்டார். அவர்களில் பலர் தம் மனைவி குழந்தைகள் முன்னிலையில் ரத்தம் சொட்ட உயிரிழந்தனர்.

அருகில் உள்ள அடர்ந்த வனப் பகுதிக்குள் தப்பி ஓடிய அந்தப் பயங்கரவாதிகளை இந்தியா வெறியுடன் தேடுகிறது.

இந்த பயங்கரவாதத்திற்குப் பின்னால் பாகிஸ்தான் இருக்கும் என்பது பத்தாம் கிளாஸ் பிள்ளைக்கும் தெரியும்.

நமது நாட்டில் பாதகம் செய்து தப்பித்தவர்களை உயிருடனோ உயிர் இல்லாமலோ பிடிக்க வேண்டும். அவர்களை அனுப்பி வைத்தவர்களைக் கனமாகக் கவனிக்க வேண்டும். தேசப் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய வேண்டும். இதில் நமது ராணுவ வீரர்கள் மற்றும் இரு நாட்டு அப்பாவி மக்களின் அனாவசிய உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டும். இதற்காகப் பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் சரியான முடிவுகள் எடுப்பது இந்தியப் பிரதமருக்கு எளிதல்ல. அவரவர் நலன்களைப் பேணும் உலக நாடுகளையும் கூடியவரை நமது நடவடிக்கைகளை ஏற்கச் செய்யவேண்டும். இதுவே பெரிய காரியம்.

நம்முள் முன்பு முனகிய சில கேள்விகள் இப்போது உரத்து எழுகின்றன.

பற்பல நூற்றாண்டுகளாக ஹிந்துக்களின் அதிமுக்கியப் பிரதேசமாக இருக்கும் பாரதத்தின் ஹிந்துக்களுடன், இந்திய முஸ்லிம்கள் உள்ளார்ந்த நன்றியுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறார்களா? எப்படி என்றால் இந்திய பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளது போல். வெளி தேசத்திலிருந்து பாரதத்திற்கு வந்து தலைமுறைகளாக இங்கு வாழும் பார்சிக்களைப் போல். எதற்காக அந்த நன்றி? வேறு தேசங்களில் அப்படி நடக்கிறதா?

இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று கல்லூரிகளில் படித்து நல்ல வேலையுடன் குடும்பங்களாக அந்த நாட்டில் வாழும் ஹிந்துக்கள் இருபத்தி ஐந்து லட்சத்துக்கு மேல். அமெரிக்காவில் அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பிற்காக மனதிற்குள் நன்றியுடன் அந்த நாட்டு மக்களுடன் இணக்கமாக இருக்கிறார்கள் ஹிந்துக்கள். அதனால் அமெரிக்கர்களால் பொதுவாக விரும்பப் படுகிறார்கள்.

ஹிந்துக்களின் எண்ணிக்கை மொரிஷியஸ் நாட்டில் 48 சதவிகிதம், பிஜியில் 28 சதவிகிதம், கயானாவில் 23 சதவிகிதம், சுரினாமில் 19 சதவிகிதம். மலேஷியாவில் ஐந்தரை, நியூஜிலாந்தில் இரண்டரை. இன்னும் சில தேசங்களில் ஹிந்துக்கள் சுமாரான, கணிசமான அளவில் சிறுபான்மையினர். சட்டம் சமத்துவம் பேசினாலும், அந்த நாடுகளில் பெரும்பான்மையினர் மனதளவில் தங்களை ஏற்றால்தான் அங்கு தாங்கள் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்ற சாதாரண உண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப அந்தப் பெரும்பான்மை மக்களிடம் சினேகமாக இணக்கமாக இருந்து வாழ்கிறார்கள் ஹிந்துக்கள்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 80 சதவிகிதப் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்துக்களிடம், முஸ்லிம்கள் உள்ளார்ந்த நன்றியுடன் – அதாவது ஒரு மனிதப் பண்பு என்ற அளவிலான நன்றியுடன் – உளமார்ந்த நட்புணர்வுடனும் இணக்கமாகவும் இருக்கிறார்களா? இதற்கு ஆம் என்ற பதில் உடனடியாகக் கிடைக்காது. விதிவிலக்குகள் வேறு விஷயம். இன்னொரு புறம், இந்தியாவில் பெரும்பான்மை மதத்தினாரான ஹிந்துக்களில் பெரும்பாலோர் தமது நாட்டில் முஸ்லிம்களிடம் ஒருவிதத் தயக்கத்துடன் சற்று விலகி இருக்க நினைக்கிறார்கள். அதற்கான காரணம் சாதாரண முஸ்லிம் மக்களிடம் இல்லை. அது அந்த மக்களைக் கட்டுப் படுத்தும் முஸ்லிம் மதத் தலைவர்களிடமும் மதப் பெரியவர்களிடமும் இருக்கிறது.

சாதாரண முஸ்லிம் மக்கள் நல்லவர்கள்தான். ஆனால் முஸ்லிம் மதத் தலைவர்களின், மதப் பெரியவர்களின், போக்கு இப்படி இருக்கிறது. அதாவது, சமூகத்தில் பிற மதத்தவரும் தமக்குச் சரி சமம் என்று முஸ்லிம் மக்கள் பிற மதத்தவரை உளமாற மதித்து ஏற்பதை அந்தத் தலைவர்களும் பெரியவர்களும் விரும்புவதில்லை. காலத்துக்கு ஒவ்வாத ஏதோ காரணம் வைத்திருக்கிறார்கள்.

முஸ்லிம் மதத் தலைவர்களுக்கும் மதப் பெரியவர்களுக்கும் சாதாரண முஸ்லிம்களிடத்தில் பெரும் செல்வாக்கும் அவர்கள் மீது ஆதிக்கமும் உண்டு. அதனால் மத அடிப்படையில் ஒரு உரசல் என்று வந்தால், சாதாரண முஸ்லிம்கள் தங்கள் மதத் தலைவர்கள் மற்றும் மதப் பெரியவர்களின் உத்தரவுகளைத் தான் ஏற்று செயல்படுவார்கள்.

ஹிந்துக்களை அவ்வாறு ஹிந்து மதத் தலைவர்களும் ஹிந்து மதப் பெரியவர்களும் கட்டுப் படுத்துவதில்லை – அந்த வழக்கம் ஹிந்து மதத்தில் இல்லவும் இல்லை. அதனால் ஹிந்துக்களின் இயற்கையான சாந்தமும் சகிப்புத் தன்மையும், பிற மதத்தவருடன் இணக்கமாக இருக்கும் குணமும் என்றும் மாறாது. ஆனால் தம்மை முஸ்லிம்கள் பெரிதும் மதிப்பதில்லை, அவர்களின் மதத் தலைவர்களின் சொல் கேட்டு தம்மை அவர்கள் ஆள நினைக்கிறார்கள், என்ற உணர்வில் ஹிந்துக்கள் முஸ்லிம் மக்களிடம் பொதுவாகத் தயக்கம் காட்டித் தள்ளி நிற்கிறார்கள். வேறு வகையில் எதிர்ப்புக் காட்டத் தெரியாதவர்கள் ஹிந்துக்கள்.

தங்களின் மதத் தலைவர்கள் மற்றும் மதப் பெரியவர்களின் ஆதிக்கம் மூலமாக ஒன்றுபட்டிருக்கும் முஸ்லிம்கள் போல், ஹிந்துக்கள் பெரிதாக மத அடிப்படையில் ஒன்றுபட்டு நிற்பதில்லை. அதனால், சொந்த நாடான இந்தியாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இங்கு சிறுபான்மையினாரான முஸ்லிம்களிடம் உள்ள கூட்டு பலம் ஹிந்துக்களிடம் இல்லை.

இப்போது மீண்டும் பஹல்காமுக்கு வருவோம்.

பஹல்காம் நிகழ்வைத் தலைகீழாகக் கற்பனை செய்து பாருங்கள். ஒருவேளை பஹல்காமில் நான்கு ஹிந்து பயங்கரவாதிகள் இருபத்தி ஐந்து அப்பாவி முஸ்லிம்களை அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றிருந்தால் இந்திய ஹிந்துக்களே அதிர்ச்சி அடைவார்கள், அதை ஏற்க மாட்டார்கள். அதோடு, இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் மதத் தலைவர்களும் முஸ்லிம் அமைப்புகளும் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலையானதைக் கண்டனம் செய்து ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். பாகிஸ்தானும் அந்தப் பாதகத்தைக் கண்டித்து நீதி கேட்கும். அப்படி எழும் கண்டனங்கள் சரிதான், நியாயம்தான்.

பஹல்காமில் முஸ்லிம்கள் கையால் அப்பாவி ஹிந்துக்களுக்கு உண்மையில் பாதகம் நேர்ந்தபோது, இந்திய முஸ்லிம்களிடமிருந்து பரவலான உரத்த கண்டனம் எழவில்லை. வந்தது சொற்பம். நடந்த பயங்கரவாதத் தாக்குதலைப் பாகிஸ்தான் கண்டித்ததா என்பதைத் தேடிப் பார்க்க வேண்டும். இதற்கெல்லாம் நேரடிக் காரணம் முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் மதப் பெரியவர்களின் நீண்டகால அணுகுமுறைதான் – சாதாரண முஸ்லிம் மக்கள் அல்ல.

பஹல்காம் படுகொலையில் இந்தியா நடவடிக்கை எடுப்பதில் இத்தனை விஷயங்களையும் கவனத்தில் வைத்து நிதானமாகச் செயல்படவேண்டும். பாகிஸ்தானில் யார் யாரை எப்படிக் குறி வைத்தால், அந்த நாட்டில் என்ன திரைமறைவு வேலைகள் செய்ய முடிந்தால், பாகிஸ்தான் பலவீனப் படும், அடங்கும் என்று திட்டமிட்டு இந்தியா முயற்சிக்க வேண்டிய காரியங்கள் உண்டு. அதை மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். நாம் நன்றியுடன் பொறுமை காக்க வேண்டும்.

இந்தியாவுக்குப் பாகிஸ்தானுடனான பிரச்சனையின் முக்கியக் காரணம் பாகிஸ்தான் அரசோ அதன் ராணுவமோ அல்ல. அந்தப் பிரச்சனையின் மிக முக்கியப் பகுதி நமது நாட்டு மக்களிடம் இருக்கிறது – அவர்களில் பெரும் பகுதியினரின் ஒற்றுமையின்மை ஒழிய வேண்டும்.

யூதர்களின் பலத்த ஒற்றுமையால், இஸ்ரேல் நாட்டைச் சுற்றிப் பல எதிரி நாடுகள் இருந்தும் இஸ்ரேல் அவைகளைச் சமாளிக்கிறது, வெல்கிறது. ஆனால் இந்திய ஹிந்துக்களிடையே ஒற்றுமை இல்லாததால் அவர்கள் நலிவடைகிறார்கள். இனியாவது நமது ஹிந்துக்கள் தாமாக ஒற்றுமைப் பாடம் கற்பது நல்லது. பஹல்காம் சோகம் அதற்கான தொடக்கத்தைத் துரிதப் படுத்துமோ?

Author: R. Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories