
அவர் ஏன் ஸ்பெஷல்…
அன்று மோடியிடம் போய் சொல்ல என கோழைத்தனமாக…. அப்பாவி பொதுமக்களை தாக்கிவிட்டு பேடித்தனமாக சுவர் ஏறி குதித்து ஓடிப்போனவர்களை… அவர்களை தயார்படுத்தியவர்களை… ஆதரித்தவர்களை…. அவர்களுக்கு உச்ச பட்ச பாதுகாப்பு அளித்தவர்களை…
அவர்கள் வாழ்ந்த பகுதியில் வைத்தே ., அங்கு உள்ள அப்பாவி பொதுமக்களுக்கு கொஞ்சம் கூட பாதிப்பு ஏற்படுத்தாமல்…. துல்லியமாக இருந்த இடத்தில் இருந்தே தாக்குதல் நடத்தி அழித்திருக்கிறார்கள் நம்மவர்கள்.
ஒரு பாகிஸ்தானிய பிரஜை கூட இந்த தாக்குதலில் கொல்லப்படவில்லை……ஆன போதிலும் இறப்பு விகிதம் இரட்டை இலக்கத்தை தாண்டிடும் இன்று இரவு பொழுதிற்குள் என்கிறார்கள்..
அப்படி என்றால் இவர்கள் அத்தனை பேரும் தீவிரவாத அமைப்பை சேர்க்கைகள் என அடித்து கூறுகிறார்கள்.
பாகிஸ்தானிய தரப்பில் எதிர்பார்த்தது ஒசாமா பின் லேடனை வேட்டையாடியது போலான தாக்குதல் சம்பவத்தை…. அதற்கு உதாரணம் இந்த இறப்பு விகிதம். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தான் பார்த்து பார்த்து செய்து வைத்து விட்டு காத்திருந்தார்கள்.
அப்படி யாரெல்லாம் பாதுகாத்து வந்தது பாகிஸ்தான்……..????
இதில் யாரெல்லாம் கொல்லப்பட்டு இருப்பதாக உளவு தகவல்கள் சொல்கிறது….???
காந்தகார் விமான கடத்தல் சம்பவம் ஞாபகம் இருக்கின்றதா….!!! அதில் மூளையாக செயல்பட்ட மஸூத் அஸார், தற்போது ஜெய்ஷிரி முகம்மது இயக்கத்தின் தலைவன்…அந்த இயக்கத்தின் உயிர் நாடி இந்த ஏவுகணை தாக்குதல் சம்பவத்தில் உருக்குலைந்து உருகி ஆவி ஆகி இருக்கிறான்.
சுமார் ஆயிரத்து நூறு கிலோ எடை கொண்ட ஏவுகணை அது. அவன் உருவாக்கி பராமரித்து வந்த மசூதி ஒன்றில்…. அவனது மேற்பார்வையில் இயங்கி வந்த மதராஸா கட்டிடத்தோடு மொத்தமாக அழித்தொழித்திருக்கிறார்கள்.
வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசை தலை குனிய வைத்த நிகழ்வு அது. IC 814 எண் கொண்ட அந்த பயணிகள் விமானத்தை கடத்தி சென்று, இந்த தீவிரவாதியை தான் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு சென்றனர் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
24 நிமிடங்கள்
23 ஏவுகணைகள்.
9 இடங்களில் 5 பாகிஸ்தானிலேயே வருகிறது. இன்று மட்டும் ஒன்றேகால் மணியளவில்… அதிகாலையிலேயே பாகிஸ்தானில் சூரியன் உதித்தது. ஏவுகணை வெடித்து பற்றி எறிந்த தீப்பிழம்பு செஞ்சூரியனையே விஞ்சியது காணொளி காட்சிகளில் மிகத் தெளிவாக தெரிந்தது.
மணமான ஒரே வாரத்தில் தனது திலகத்தை இழந்து நின்ற….. இந்தியக் கொடி போர்த்திய பெட்டி முன் அலறலாய் வெளிப்பட்ட ஜெய்ஹிந்த் என்கிற அந்த பெண்ணின் குரல்…. இன்றைய தாக்குதல் சமயத்தில் பலரது யாஹல்லா என்கிற தீனமான குரல்… நிச்சயமாக மருந்திடத்ததாக அமைந்திருக்கும். அதில் சந்தேகமேயில்லை.
அவரை ஏன் உலகத் தலைவர் என்கிறோம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். தன் குடிகளுக்கு எது தேவையோ… அதனை அது தேவைப்படும் சமயத்தில் என்ன விலை கொடுத்தேனும் கொண்டு வந்து தருகிறார்.
பங்கர் பஸ்டர் குண்டுகள்…
ஸ்கால்ப் ஏவுகணைகள்…. இன்னமும் எண்ணற்ற அதி நவீன ஆயுதங்களை கொண்டு… சொல்லிச் சொல்லி அடித்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கு ரஃபேல் விமானங்கள் தான் பிரதான பங்கு வகித்திருக்கிறது. ஆளில்லா உளவு விமானங்கள் முதற்கொண்டு தற்கொலை ட்ரோன்கள் வரை டஜன் கணக்கில் இறக்கி இருக்கிறார்கள்.லஷ்கர் ஈ தொய்பா முகாம்களை சேர்ந்த முக்கியமான தலைகளில் கிட்டத்தட்ட பதினைந்து பேரை தூக்கி இருக்கிறார்கள்.
நிச்சயமாக இந்த தாக்குதல் சம்பவம் ஆக்ரமிப்பு காஷ்மீர் பிராந்தியத்தில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்.
தாக்குதல் நடத்தியது… தாக்குதலுக்கான திட்டமிடல்… அத்தனையும் உலகத் தரம். நாளைய உலகில் பாடமாக வைத்து படிக்க இருக்கும் அளவிற்கு ஆகச் சிறந்த வழிகாட்டல் இது.
இன்றைய தினம் நாடு முழுவதும் சுமார் 284 இடங்களில் போருக்கான பாதுகாப்பு ஒத்திகை நடக்க இருப்பதாக அறிவித்துவிட்டு நல்லிரவில் இறங்கி அடித்தாடி இருக்கிறார்கள். அத்தனையும் துல்லியமான தாக்குதல். அவ்வளவும் ஆகச் சிறந்த உளவு தரவுகள்.
இத்தனைக்கும் ….
இதனை எந்த ஒரு இடத்திலும் அலட்டலாக அறிவிக்கவில்லை. அது தான் சாமர்த்தியம்.அதேசமயம் இதனை தாக்குதல் நடத்திய இரண்டு பெண்கள்… ஆம் நம் இந்திய வீராங்கனைகள் தான் வழி நடத்தி இருக்கிறார்கள்… அவர்களை கொண்டே இதனை அறிவிக்க செய்து அசரடித்திருக்கிறார்கள்.
அவர்கள்…. இந்த ஆப்ரேஷன் ஸிந்தூர் நடத்தி காட்டியவர்கள் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோம்கா சிங்.
அவர்கள் ஜென்மத்திற்கும் இதனை மறக்க மாட்டார்கள். கூப்பிட்டு வைத்து கன்னத்தில் அறைந்திருந்தாலும் இத்தனை விசனப்பட்டு இருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் கொண்டுள்ள மதச் சிந்தனை அத்தகையது.
மனோதத்துவத்தில் மகோன்னத விதத்தில் பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.
இனி பாகிஸ்தான் பதில் தாக்குதல் என ஏதேனும் செய்ய நினைத்தால் அது அவர்களுக்கு அடுத்த அடி ஒவ்வொருவரின் பிட்டத்திலேயே விழும். அநேகமாக இதை அங்கு உள்ள பெண்களே செய்திட கூடும். இது இன்னமும் அசிங்கம் அவர்களுக்கு.
அப்படி ஒரு ஆட்டம் இது.
இந்த சூட்சுமம் இங்கு உள்ள பலருக்கு புரியவில்லை. 25+1 உயிர்களுக்கு பதிலடிக்கு ஏன் இத்தனை பெரிய செலவு என்கிறார்கள் விஷயம் புரியாத ஞான சூன்யங்கள். நம்மவர்கள் பதிலடி கொடுக்கவில்லை….. பதில் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். அது உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக…..இனி எவன் ஒருவனும் மதத்தின் பெயரால் தீவிரவாத செயல்களில் அத்தனை சுலபத்தில் இறங்கி விட மாட்டார்கள்.
இன்னமும் சரியாக சொல்வதென்றால்….. அமைப்பு ரீதியாக மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்திவிட்டு ஓடி விட முடியாது. அவர்கள் எங்கு சென்றாலும் எந்த நாட்டில் இருந்தாலும் சரி ….வந்து உதைப்போம் என்கிறார் இவர்.
அமைப்பு ரீதியாக இல்லை என்றால்….. அடுத்ததாக தேசத்தை முன்னிறுத்தி…. அதாவது தான் இந்த தேசத்தவன் என்பதாக அறிவித்துக் கொண்டோ அல்லது அந்த தேசமோ நேரிடையாக களத்தில் இறங்கி நின்றால்……
அப்படி நிற்பதற்கு மட்டுமே தற்சமயம் சாத்தியம் உள்ளதாக மாற்றம் செய்து வைத்திருக்கிறார்கள், நம்மவர்கள்.
உதாரணத்திற்கு….. ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்டவர்களை யாராக அடையாளம் காட்ட முடியும்.????
அமைப்பா அல்லது தேசமா…
அமைப்பு என்றால் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்பை பாகிஸ்தான் பராமரிக்கிறது என்றாகும்.
தேசம் என்றால் பாகிஸ்தானிய பிரஜையாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவதற்கு அந்த தேசமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
இப்போது என்ன செய்ய முடியும் பாகிஸ்தானால்.
எது செய்தாலும் சர்வதேச சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டி வரும்…. காரணம் தற்சமயம் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் சுழல் முறை தலைவர் பதவியில் பாகிஸ்தான் இருக்கிறது.
ஆக தடம் பார்த்து தட்டி இருக்கிறார்கள்.
சாணக்யா தேசம் என்பதை மீண்டும் ஒரு முறை மெப்பித்திருக்கிறார்கள்.
சரி……. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் எந்த ஒரு பதில் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றாலும் அப்போதும் வெற்றி நமதே…. எவ்விதம் எனில்….. அவர்கள் மறைமுகமாக தீவிரவாத நடவடிக்கைகளுக்கு மதத்தின் பெயரால் அடைக்கலம் கொடுத்தது ஊர்ஜிதம் ஆகி விடும். ஆக இஸ்லாம் இனிய மார்க்கம் என யாரும் இனி வரும் நாட்களில் அத்தனை சுலபத்தில் சொல்லிட முடியாது.காரணம் பாகிஸ்தானிய பிரதமர் தன்னை இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தானியர் என அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
அடுத்ததாக வரும் 23 ஆம் தேதிக்கு முன்னதாக மீண்டும் ஒரு சம்பவம் இருக்கிறது என பூடகமாக…. விஷயம் அறிந்த வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள்.
இன்றைய தினம் பாகிஸ்தானில்… பங்கு வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்கள் பலத்த சரிவை சந்தித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தனிக் கதை.
பொருளாதார ரீதியாக இது மிகப் பெரிய அடி. எல்லையில் நம்மவர்கள் பலத்த இடி கொடுத்து இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் திமிறும் என்றா நினைகின்றீர்கள்…….?????
இன்றைய சம்பவம்
காயத்திற்கு வெறும் மருந்து மட்டுமே. நாட்பட்ட வியாதிகளுக்கு தரமான மருத்துவ சேவை வரும் நாட்களில் இருக்கிறது.
— ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்





