
“ஆப்ரேஷன் சிந்தூர்” எனும் வெற்றி செய்தியை கேட்டு பெருமிதப்படுகிறோம். பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கும் வீரதீர செயல் செய்த இந்திய இராணுவத்திற்கு இந்து முன்னணியின் வீர வணக்கம். பாரத இராணுவத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…
கடந்த ஏப்ரல் இருபத்தி இரண்டாம் தேதி பஹல்காமில் சுற்றுலா வந்த 26 அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதனால் நாடே சோகத்தில் உறைந்திருந்தது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நமது பாரத இராணுவம் நேற்று “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்துள்ளதை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
இந்த முக்கியமான தருணத்தில் மக்கள் அனைவரும் தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உணர்ச்சிகளை தூண்டக்கூடிய வகையில், விமர்சனம் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலோ, கேட்டாலோ அதன் உண்மை தன்மையை அறியாமல் பகிர வேண்டாம். வதந்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என கருத்து மோதல்கள் உருவாகி வருகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் விஷயத்தில் இணையத்தில் கருத்து சொல்வதை தவிர்ப்போம்.
கடந்த காலங்களில் நமது தேசம் அண்டை நாடுகளுடன் போர் புரியும் போது எத்தகைய சூழல்களில் ஒத்துழைப்பு கொடுத்தோமோ அதைவிட நூறு சதவீதம் இப்பொழுதும் ஒத்துழைப்பு கொடுப்போம்.
அதேபோல நமது இராணுவத்தை பற்றியோ, தேசத்தை பற்றியோ தவறான தகவல்களை யாரேனும் பரப்பினால் உடனடியாக நேரிலோ, தொலைபேசி மூலமோ, இணைய வழியிலோ தேசிய புலனாய்வு முகமையில் புகார் அளிப்போம். அதேபோல இன்று நாட்டின் பல மாவட்டங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள், அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நமது ராணுவத்திற்கு வலு சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிக்கும் இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு எல்லோரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.





