
— ஜெய்ஹிந்த் ஸ்ரீராம் —
மாயாஜால் : இந்திய ராணுவத்தின் இந்திர ஜாலம்!
ஆப்ரேஷன் ஸிந்தூருடன் இந்தியா நிறுத்திக் கொள்ளலாம் என நினைத்து கொண்டு இருந்தவர்களுக்கு…. பாகிஸ்தான், ராணுவத்திடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறோம் என விதண்டாவாதம் பேசி….நேற்றைய தினம் இரவு ஒரு சம்பவம் செய்தது. அத்துமீறி இந்திய பகுதியில் உள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
முன்கூட்டியே இதனை அவதானித்த காத்திருந்தவர்களுக்கு இது நல்வாய்ப்பாகி போனது .
உலக நாடுகளின் கவனத்திற்கு தீவிரவாதிகளுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது… தற்சமயம் தாக்குதல் நடத்துவது வரை மொத்தமாக விளக்கி சொன்னவர்கள் உலக நிதி அத்தனையும் நிறுத்தி வைக்க கேட்டுக் கொள்ள உலக வங்கி தற்சமயம் இதனை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
இதனிடையே அந்த பக்கி சொல்லி வைத்தார் போலே… சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. பொற்கோவில் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ஏவுகணையை ஏவவும் செய்தது.
ஆனால் அவற்றை எல்லாம் ஒன்று விடாமல் நம்மவர்கள் பதம் பார்த்து இருக்கிறார்கள். இது பலத்த ஆச்சரியங்கள் ஏற்படுத்தியது.
உலகத்தவரின் கண்களுக்கு வேறோர் விஷயமும் கவனத்திற்கு வந்துள்ளது.
அது நம்மவர்கள் வழங்கி இருந்த ஆதாரங்களில்… செயற்கை கோள் புகைப்படங்கள் இடம்பெற்ற இருந்ததில்…. அச்சு பிசங்காமல் மிக துல்லியமாக தாக்குதல் நடத்தி இருக்கும் விவரங்கள் அவர்கள் மலைக்க வைத்திருந்தது என்றே சொல்லலாம். எல்லை தாண்டாமல் இருந்த இடத்தில் இருந்தே வான் பரப்பில் இருந்து மிக துல்லியமாக தாக்கி இருப்பது தெரியவந்திருக்கிறது அவர்களுக்கு.
இரண்டு புகைப்படங்கள் தொகுப்பும் வழங்கப்பட்டிருக்க….. அதில் தாக்குதலுக்கு முன்., தாக்குதலுக்கு பின் என வகைப்படுத்தி இருந்தனர் நம்மவர்கள். அவற்றிலிருந்து தான் மேற்கொண்ட தரவுகள் எல்லாம் இருந்திருக்கின்றன.
பிபிசி நேற்று தினம் இந்திய தாக்குதலில் ஓர் மருத்துவமனை தாக்கப்பட்டதாக சொல்ல….. நம் இந்திய தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட ஆதாரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் சமயத்தில் தான் மேற்படி விஷயங்கள் எல்லாம் வெளியே வந்திருக்கிறது. பிறகு வழக்கம் போல அந்த செய்தி ஊடகம் நம்மூர் தி ஹிந்து போல பம்மி நழுவி விட்டது மன்னிப்பு கேட்டு.
அடுத்ததாக நம் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்29k தாக்குதலுக்கு இலக்கானதாக சொல்ல அதுவும் தவறான செய்தி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
விமானப் படை மாத்திரமே இந்த தாக்குதலில் ஈடுபட்டதா என்றால் அது தான் இல்லை.
பிறகு…… தரைப் படை ராணுவத்தினரும் தங்கள் பங்குக்கு சிலவற்றை ராஜஸ்தானில் இருந்து சிறப்பான சம்பவம் செய்து இருக்கிறார்கள்.
இந்த தாக்குதலில் பிரமோஸ் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது அதிரடி போதாதென்று அடுத்ததாக நம் இந்திய தரப்பில் உருவான… உருவாக்கப்பட்ட சில ஏவுகணைகள் இந்த சமயத்தில் அடங்கி இருக்கிறது.
முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட DRDO வால் தயாரிக்கப்பட்ட ரோடேடிங் லேசர் கைடட் பாட் களும் இதில் அடங்கும்.
அதாவது gps வழிகாட்டுதல் ஏவுகணை வேறு இது …. இந்த ரகம் வேறு.
இவை ரேடியோ சிக்னல் மற்றும் காந்த புல நுண்ணறிவு திறன் கொண்ட மின்காந்த அலைகள் மூலமும் கட்டுப்படுத்தக்கூடிய அதி நவீன ஏவுகனை ரகம் என்கிறார்கள்.
இது ஒரு மீட்டர் சுற்றளவுக்குள்ளாக தாக்குதல் வீச்சு கொண்டு இருக்கிறது. அதாவது நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து இலக்கை ஒரு மீட்டர் சுற்றளவுக்குள் தாக்க முடியும்.
இது மிக மிக துல்லியமாக வேலை செய்து அசரடித்திருக்கிறது என்பதில் தான் விஷயமே தங்கி இருக்கிறது.
இது இரண்டாவது அதிர்ச்சி.
இந்த அளவுக்கு மெய்ப்பிக்கப்பட்ட துல்லிய தாக்குதல் உலக அளவில் நாம் மட்டுமே மேற்கொண்டு இருக்கிறோம்.இஸ்ரேலிய தயாரிப்பு 2.5 மீட்டர் சுற்றளவு கொண்டது பயன் படுத்தி இருக்கிறார்கள். ஆன போதிலும் அதன் இயங்கு தளம் வேறு.
தீவிரவாத அமைப்பின் கூடாரங்கள் கட்டிடங்களை தவிர்த்து மறந்தும் பிற இடங்களில் தாக்குதல் நடக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்த பிறகே நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார்கள்.
பதில் நடவடிக்கைகளில் இயக்குகிறேன் பேர்வழி என பாகிஸ்தான் இன்று ஏவுகணை வீசி தாக்குதல் திட்டமிட்டு சுமார் பதினைந்து இடங்களுக்கு ஏவுகணையை அனுப்பி வைக்க அவற்றை வானில் வைத்தே பஸ்பம் ஆக்கி இருக்கிறார்கள் நம் தரப்பில்…. எப்படி முடிந்தது இது.
அது தான் இந்தரஜால். நம் பாரதப் பிரதமரால் முன்னெடுக்கப்பட்ட ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் செயல் வடிவம் பெற்ற ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவன தயாரிப்பு இது. 2019 ஆம் ஆண்டில் இதற்கான வேலை தொடங்கப்பட்டது….. இன்று பலன் தந்திருக்கிறது. தற்போதைய நிலையில் முழு விபரமும் இங்கு பகிர்ந்து கொள்வது சரிவராது. ஆனாலும்….. இன்றைய தினம் நாம் காணும் அத்தனையும் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கும் திட்ட பயன்கள்.
பாகிஸ்தான் அனுப்பிய எதுவும் நம் இந்திய எல்லையை…. நூறு மீட்டர் தொலைவை கூட தாண்டிடவில்லை. அதுபோலவே வானில் நூறு மீட்டருக்கு கீழே எதுவும் இறங்கவில்லை….. எல்லாம் பஸ்பம் ஆயின.
இதற்கு நம் இந்திய தரப்பில் இருந்து உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. அங்கு விடாமல் சங்கு ஊதிய வண்ணம் இருந்தது. எச்சரிக்கைக்கு மாத்திரமே அல்ல…. பலருக்குமே தான் என பிறகு தெரியவந்துள்ளது.
இன்று மதிய வேளையில் பல ராணுவ நிலைகள் மீது இஸ்ரேலிய தயாரிப்பு தற்கொலை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் நம்மவர்கள்.உயிர் சேதம் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் சேதாரம்…..அது நிறையவே உண்டு என்கிறார்கள்.மஹுத் அஸார் நேற்றைய தாக்குதலில் தப்பியவனை குறி வைத்தே இத்தாக்குதலில் இறங்கி இருக்கிறார்கள் நம்மவர்கள்.
பாகிஸ்தான் ராணுவம் சீனா தயாரிப்பு ஏவுகணைகள் கொண்டு தான் இன்றைய தினம் தாக்குதல் நடத்த முயற்சிக்க ….அவற்றை நம் தரப்பினர் களீபரம் செய்ததோடு சீனா தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களை முற்றிலுமாக அழித்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு உள்நுழைந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
பலூசிஸ்தான் பகுதியில் இருந்தும் தாக்குதல் ஆரம்பித்துள்ளது.
இனி பாகிஸ்தான் தரப்பில் இருந்து பாலிஸ்டிக் ரக ஏவுகணையே பறந்தாலும்…. எல்லை தாண்டாது. தவிர நம் இந்திய தரப்பில் இருந்து கடற்படையினர் களத்தில் இறங்கி விடுவார்கள் என்கிறார்கள்.
இம்முறை தப்பிப் பிழைக்க வழி இல்லை அந்த பக்கிக்கு…. வசமாய் வந்து சிக்கி இருக்கிறார்கள். சின்னாபின்னமாகி விடுவது உறுதி. ஒரு மார்க்கமாய் அமைதி கொள்ளட்டும்.





