
- சக்கரவர்த்தி மாரியப்பன்
பாகிஸ்தான் உக்ரைனுக்கு விற்று பணம் பெற்றதாகச் சொல்லப்படும் இரண்டு முக்கிய ஆயுதங்கள்.
● M109 Howitzers – ஹோவிட்சர்கள்
● BM 21 Grad – Boyevaya Mashina ராக்கெட் லாஞ்சர்கள்.
இவை இரண்டும் 1960-70 காலத்திய ஆயுதங்கள். இவை தவிர இதில் பயன்படுத்தும் 122 மி.மீ ராக்கெட்டுகள்.
ஹோவிட்சர்கள் பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட வகையின என்று அழைக்கப்படுகின்றன.
M109 அமெரிக்க தயாரிப்பு. நீண்ட தூரம் சென்று தாக்கும் ராக்கெட்டுகளை அனுப்பும் வல்லமை கொண்டது. சுமார் 250 முதல் 300 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இவை 45° கோணத்தில் குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் என்று இலக்கை திசை மாற்றிச் சுடும் வகையினது.
NATO நாடுகளுக்கு வடிவமைக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை பழைய ஆயுதங்கள் என்றும் இவற்றின் நவீன வடிவங்கள் வந்துவிட்டன என்றும் தெரிந்து கொள்ளலாம்.
BM 21 – Combat Vehicle Hail என்று பொருள். ரஷ்யா தயாரிப்பான இந்த இயந்திரம் மிக வேகமாக ராக்கெட்டுகளை அனுப்பும் திறன் கொண்டது. துல்லியமான தாக்குதல் செய்வது இதனால் முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இடைவிடாமல் குண்டு மழை பொழிய இது உதவும். ஒரு விசையில் 720 கணைகளை ஏவும் வல்லமை பெற்றது. காலம் காலமாக எதிரிகளை பயமுறுத்தும் ஆயுதம்.
இந்த போர்க் கருவிகளை மட்டுமே பாகிஸ்தான் விற்றதாகத் தகவல்கள் உள்ளன. அதே வேளையில் துருக்கியிடம் இருந்து டிரோன்களும், சீனாவிடம் இருந்து பெரும்பான்மையான ஆயுதங்களையும் அது இறக்குமதி செய்துள்ளது. போர் நடந்தால் நான்கு நாட்களுக்கு மட்டுமே ஆயுதங்கள் அதனிடம் உள்ளன என்பது சரியான வாதம் இல்லை.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ரஷ்யா ஆயுதங்களையே பாகிஸ்தான் வழங்கியது மற்றும உக்ரைனைக்கு ஆதரவான ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது இரு தரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான நிலை என்பதை துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் எடுத்துள்ளன. OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு நமக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை நாம் நம்ப முடியாது. #OperationSindoor விபரங்களை பொது வெளியில் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில் பாக்.கின் பாதிப்பு என்ன என்பது தெரியாமல் இங்கு பலர் நாம் பின் வாங்கி விட்டோம் என்று நினைக்கிறார்கள்.
இரகசியங்கள் பொது வெளிக்கு வருவது அவசியமல்ல.





