
- – பாலாஜி வெங்கட்ராமன்
ரூ.500 நோட்டுகளை நிறுத்துவது ஊழலை ஒரு அளவுக்கு குறைக்க மட்டுமே உதவலாம், ஆனால் இந்த நடவடிக்கையால் முழுமையாக ஒழிக்க முடியாது என்பதை 2016-ல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தபோது, கருப்புப் பணத்தை குறைப்பதற்கு முயற்சி செய்யப்பட்டது. ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை என்பது நிதர்சனம்.
இது ஊழலை ஒரு பகுதியாக குறைக்கலாம், ஆனால் முழுமையாக ஒழிக்க உறுதியளிக்க முடியாது, ஏனெனில் ஊழல் என்பது நோட்டு மதிப்பை மட்டும் சார்ந்து இல்லாமல், அமைப்பு ரீதியிலான பிரச்சனைகளையும் உள்ளடக்கியது.
காரணங்கள்: கருப்புபணம், மற்றும் ஊழல் பணத்தை வெள்ளையாக்க பல மாற்றுவழிகள் உறுப்பாக தங்கத்தில் முதலீடு, ரியல் எஸ்டேட்டில் முதலீடு, சினிமா முதலீடு, வெளிநாடு வங்கிகளில் முதலீடு, புதிய டிஜிட்டல் முறையில் மின்னணு மோசடி, கிரிப்டோ கரன்சி போன்றவை மூலம் அதை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்.
சந்திரபாபு நாயுடு டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை. இது பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க உதவும், இதனால் ஊழல் தொடர்பான பண பரிமாற்றங்கள் குறையலாம். ஆனால் முழுவதும் கட்டுபடுத்த முடியாது.
நிதி அமைச்சகத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் போலி ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை 317% அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை போலி நோட்டுகளைக் கட்டுப்படுத்தலாம் அதன் மூலம் போலி நோட்டுகள் புழக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.
பெரிய மதிப்பு நோட்டுகள் அரசியல் நிதியுதவி மற்றும் லஞ்சத்திற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவற்றை நிறுத்துவதற்கும் இத்தகைய நடவடிக்கை கை கொடுக்கலாம். ஆனால் இதன் மூலம் ஊழல் முற்றிலும் ஒழியாது ஊழல் என்பது நோட்டு மதிப்பை மட்டும் சார்ந்து இல்லை. அரசியல், நிர்வாக, மற்றும் சமூக அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் ஊழலை தொடர வைக்கின்றன.
பணமதிப்பிழப்பு இவற்றை முழுமையாக தீர்க்காது. என்பது ஆய்வுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்பட்டாலும், மற்ற மதிப்பு நோட்டுகள் (எ.கா., ரூ.100, ரூ.200) போலியாக உருவாக்கப்படலாம், இது பிரச்சனையை மாற்றி உருவாக்கும்.
இந்தியாவில் டிஜிட்டல் நாணயத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு (இணைய இணைப்பு, ஸ்மார்ட்போன் பயன்பாடு) இன்னும் முழுமையாக வளரவில்லை, குறிப்பாக கிராமப்புறங்களில். இது நடைமுறை சவால்களை உருவாக்கலாம். எனவே டிஜிட்டல் பண பரிவர்த்தனை உடனடியாக அமல் படுத்தினால் அதில்
சிறு வணிகர்கள், விவசாயிகள், மற்றும் கூலித்தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக பணப்புழக்கம் அதிகம் உள்ள கிராம சந்தை பொருளாதாரத்தில். சாமானிய மக்களுக்கு சிரமம்
இந்தியாவில் இன்னும் பலர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முழுமையாக பயன்படுத்தவில்லை, குறிப்பாக கிராமப்புறங்களில். ரூ.500 நோட்டு நிறுத்தப்பட்டால், அவர்கள் பண பரிவர்த்தனைகளுக்கு மாற்று வழிகளை கண்டறிய வேண்டியிருக்கும், இது சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே முழுமையாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை அமல் படுத்தினால் மட்டுமே இது சாத்தியம்.





