
ஐ.பி.எல் 2025 – 27.05.2025 லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
நேற்று ஜெய்ப்பூரில் நடந்த மும்பை இந்தியன்ஸ் (184/7) vs பஞ்சாப் கிங்க்ஸ் (187/3) ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றதாலும் இன்று லக்னோவில் நடந்த லக்னோ (227/3) vs பெங்களூரு (230/4) அணிகளின் ஆட்டத்தில் பெங்களூரு அணி வென்றதாலும் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் பஞ்சாப் (19 புள்ளிகள் ரன்ரேட் 0.372), பெங்களூரு (19 புள்ளிகள், ரன்ரேட் 0.301), குஜராத் (18 புள்ளிகள்), மும்பை (16 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே வந்துள்ளன.
இதன்படி 29.05.2025 அன்று பஞ்சாப் முல்லன்பூரில் நடைபெறும் தேர்வுப்பொட்டி ஒன்றில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோத உள்ளன. 30.05.2025 அன்று முல்லன்பூரில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் விலக்கும் போட்டியில் குஜராத்தும் மும்பை அனிகள் மோதவுள்ளன.
இதன் பின்னர் தேர்வுப்போட்டி-2 ஜூன் 1ஆம் தேதியும் இறுதிப்பொட்டி ஜூன் 3ஆம் தேதியும் நடைபெறும். இவை இரண்டும் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன.
இன்று நடந்த பெங்களூரு-லக்னோ போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணிக்கு ரிஷப் பந்த் 118 ரன்கள் சேர்த்தார். இதற்கு முன்னர் 133 ஆட்டங்களில் அவர் அடித்த மொத்த ரன்னைவிட இது அதிகம். இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்.
இரண்டாவதாக பெங்களூரு அணி ஆடியபோது இன்று அணித்தலைவராக இருந்த ஜிதேஷ் ஷர்மா (33 பந்துகளில் 85 ரன்) அடித்தார்.
நேற்று நடந்த மும்பை (184/7), பஞ்சாப் (187/3) ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் பிரியான்ஷ் ஆர்யா 67 ரன்களும் ஜோஷ் இங்கிலீஷ் 73 ரன் களும் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.





