
விமானம் கீழே சரிந்த கொண்டு இருக்கிறது இரண்டு இஞ்சின்களும் செயல் இழந்து விட்டது….
இந்த தகவல் தான் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி மதியம் ATC க்கு வந்தது.
இது அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல அப்போது தான் டேக் ஆஃப் ஆன AI 171 இல் வந்திருந்தது. மீண்டும் இவர்கள் தொடர்பு கொள்ள விமானம் அங்கு இல்லை. இவர்கள் ATC, அதாவது ஏர் ட்ராஃபிக் கன்ட்ரோல் டவரில் இருந்து பார்க்க விமானம் அருகில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் விழுந்து வெடித்து தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.
அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் அங்கிருந்தவர்கள்.
உலக நாடுகளிலும் ஒரு கனம் ஆடித் தான் போனார்கள்.
காரணம்…… அமெரிக்க போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான மிகவும் நம்பகமான விமானமாக அதுவரை கருதப்பட்ட போயிங் 787 டீரீம் லைனர் முதல் முறையாக முற்றிலும் எரிந்து சேதமடைந்ததிருந்தது.
இந்த AI 171 விமான விபத்தின் காரணம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில் விமானத்திற்கான எரிபொருள் அணைக்கப்பட்டு இருந்ததாக…. ஊர்ஜிதம் செய்து இருக்கிறார்கள்.
இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இதனை கைகளால் மட்டுமே…. அதாவது விமானிகளால் மட்டுமே இயக்க…, அணைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட ஓர் பொறிமுறை என்பதால் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
விமான இஞ்சினில் தீ ஏற்பட்டால் விமானியால் அணைக்க இந்த பொறிமுறை அங்கு வைக்கப்பட்டிருக்கிறது. தவிர இது டெக்னிக்கல் டூல்… அதாவது கம்ப்யூட்டரால் இயங்கும் ஸ்வீட்ச் இல்லை…. ஹேக் செய்துவிட்டதாக சொல்வதற்கு…. அப்படி என்றால் விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு தான் இஞ்சின்களுக்கான எரிபொருளை நிறுத்தி வைக்க அவசியம் என்ன வந்தது என்கிற கேள்வியும் வருகிறது.
விமான இஞ்சின் இரண்டுமே இரண்டு வெவ்வேறான எரிபொருள் குழாய் மூலம் சப்ளை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் அந்த இரண்டு குழாய்களுக்கென்று இரண்டு தனித்தனி குமிழ் சுவிட்ச் கொடுக்கப்பட்டு ஏதேச்சையாக கை பட்டு அது இயங்கி விடக்கூடாது என்பதற்காக அழுத்தி கீழே இறக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்திருக்கின்றது. இந்த விமானத்திலும் அப்படி இருக்க….. ஏன் இதை இயக்கினார்கள் என்பது தெரியவில்லை.
இரண்டு சுவிட்ச்களை தனித் தனியே… அதேசமயம் இரண்டையும் அணைத்து வைத்து இருக்கிறார்கள்.
ஏன்……. தெரியவில்லை..,
இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரேயொரு பயணி… 11A சீட்டில் இருந்த பயணி மீது பலரது கவனமும் திசை திரும்பி இருந்தது விபத்து நடந்த வாரத்தில்….. கதவு திறந்து வந்ததாக அவர் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது தான் அதற்கு காரணம். ஆனால் அவர் விமானம் விழுந்த சமயம் விமானத்தின் இடது புற இறக்கை ஓரம் முதலில் கட்டிடத்தில் தட்டி… தூக்கி வீசப்பட்டு மணல் குவியலில் விழுந்தது ஊர்ஜிதம் ஆனதால் விட்டுவிட்டார்கள்.
அடுத்ததாக விமானத்தின் கருப்பு பெட்டி புதுடெல்லிக்கு கொண்டு வருவதில் சிக்கல் எழுந்தது. வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல உத்தேசித்து கடைசி நேர மாறுதலாக டெல்லியிலேயே வைத்து ஆராய்ந்து வருகிறார்கள். இதனையொட்டி அமெரிக்க புலனாய்வு குழுவினர் இதிலிருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவும் ஓர் வகையாக சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறது.
விமான விபத்தில்….. ஏற்படுத்தப்பட்ட காரணங்களால் விபத்து நிகழ்ந்தால் இழப்பீட்டு தொகை கூடும். தனி நபர் இன்ஷூரன்ஸ் அது தனி.
மேற்சொன்ன விபத்தில் இழப்பீட்டு தொகை கூடும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….
புற காரணிகள் காரணமாக விபத்து நடந்திருப்பதாக…. விமான கோளாறு காரணமாக விபத்து நடக்கும் வாய்ப்பு மிக மிக குறைவான இருந்திருக்கின்றது என்பதாக… விசாரணை சென்று கொண்டு இருக்கிறது.
விமான விபத்து நடைபெற்றால்..
இது விமானத்தை தயாரித்த நிறுவனம்… அந்த நிறுவனம் இருக்கும் நாடு… அதை வாங்கிய நாடு….. அதை இயக்கிய நிறுவனம்.. என பலரும்…. பலருக்கும் சிக்கலை உண்டாக்கும்.
இது இந்த விபத்து உண்டாக்கும் போலிருக்கிறது.
ஒரு வேளை இதில் சதிச்செயல் இருக்கக் கூடுமோ என்பது போலவும் புலனாய்வு குழு ஒன்று விசாரணை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படி இருப்பினும் நம் இந்திய தேசத்தில் நடைபெற்ற முதல் தனியார் நிறுவன விமான விபத்தாக இதை அணுகி…. அதை சரியான விதத்தில் கொண்டு சென்று இருக்கிறார்கள் என்பதாக உலகளவில் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். காரணம் இதேபோல் வேறோர் விபத்து நடந்திருப்பின் அவற்றை குறைந்த பட்சம்…… இழப்பீட்டு தொகை கூடி விடக்கூடாது என்பதற்காகவாவது மறைத்து விடும் சாத்தியம் இருந்திருக்கும். ஆனால் இந்திய அரசு அப்படி ஏதும் செய்யவில்லை என்பது இந்த சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததை பொது வெளியில் கொண்டு வந்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள்…. என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள் அவர்கள்.
விமானத்தை இயக்கிய மூத்த விமானி குறைந்தது பத்தாயிரம் மணிநேர பறத்தல் அனுபவத்தை கொண்டு இருக்கிறார் நிச்சயமாக இந்த பொறிமுறை வசதி குறித்து நன்கு அறிந்தவராகவே இருக்கும் பட்சத்தில் ஏன் அணைத்து வைக்கப்பட்டது என்பதே இதில் பிரதான கேள்வியாக இருக்கிறது.
காக்பிட் உரையாடலை முழுமையாக ஆராய்ந்து அறிக்கையாக வெளிவர குறைந்தது பத்து மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள் இத்துறை சார் வல்லுனர்கள். தற்சமயம் புகைப்பட ஆதாரங்கள் மட்டுமே வெளிவந்திருக்கிறது.அவற்றையும் நன்கு அலசி ஆராய்ந்து ஊர்ஜிதம் செய்து இன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.இது, இதில் பயணம் செய்த பயணிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க போதுமான அடிப்படை ஆதாரங்கள் ஆகும்.
விபத்து நடந்த சமயத்தில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் டாட்டா குழுமத்தின் பங்குகள் சரிந்தன. ஏர் இந்தியாவை இயக்கும் டாட்டா குழுமத்திற்கு இது போதாத வேளை போலிருக்கிறது. போயிங் நிறுவனம் சமாளித்து விடும் போலிருக்கிறது மேற்சொன்ன விவகாரங்களால்…… பார்க்கலாம்.
- ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்





