
செய்தியும் சிந்தனையும்!
சிதம்பரம் அரசு மேநிலைப்பள்ளியில் நடைபெற்ற காமராஜரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, மலர் தூவி மரியாதை செய்து, பெரியார் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தியவர் காமராஜர் – என்று கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
உண்மையில் காமராஜரைத் தொடுவதற்கு திமுக., தகுதியானதா என்பது தமிழகத்தின் வரலாறு அறிந்தவர்கள் முன் உள்ள கேள்வி!
காமராஜரை பற்றி கருணாநிதி கூறியவை…
அண்டங்காக்கா,எருமைத் தோலர், காண்டாமிருகத் தோலர், பனை ஏறி,மரமேறி, நாடான், சாணான், நனைச்ச பனை, கட்டைப்பீடி காமராஜர், கோமாளி ராஜா, அறிவிலி, அலி, வெறுந் தலைவன் என்று 1 சதவிகிதம் கூட அரசியல் நாகரீகமோ, பண்பாடோ இல்லாமல், வாய்க்கு வந்தபடி காமராஜரை வசைபாடியவர் கருணாநிதி
விருதபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான் இந்த காமராஜர் என்றவர் கருணாநிதி.
” துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதை போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக, துறந்து விட்டு நிற்கிறேன் “ என்று மூத்த எழுத்தாளர் சாவியிடம், கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார், காமராஜரின் தாய் சிவகாமி அம்மையார்.
அந்த புண்ணியவாதியைத்தான், “ கருவாட்டக்காரி “ என்று கரித்துக்கொட்டினார் கருணாநிதி.
4000 நாட்களுக்கு மேல், கொடுஞ்சிறையில் கழித்த தாலும், குடும்பம், குழந்தை, குட்டிகள் என்றிருந்தால், பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும், தன் தாய் எவ்வளவோ வேண்டியும், “ திருமணம் வேண்டாம் “ என்று மக்கள் தலைவராக திகழ்ந்தார் காமராஜர்.
அதற்கு, “ காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை “ என, ‘ நாகரீகத்தோடு ‘ நல்கினார் கருணாநிதி.
“ காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று எருமையையே அனுப்பியுள்ளது “ என காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டு பேசினார் கருணாநிதி.
இன்னும், இன்னும் ஏராளம்…
இன்றோ….கருணாநிதியின் தவப்புதல்வன் மு.க.ஸ்டாலின், காமராஜர் புகழை ஓங்கி உரக்க முழங்குகிறார்.
ஸ்டாலின் அவர்களே, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே… ” கர்ம வீரர், தியாக சீலர் காமராஜரை இழித்தும், பழித்தும் பேசிய என் தந்தை கருணாநிதி அவர்கள் செய்த தவற்றிற்கு ( பாவத்திற்கு ) நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் ” என்று பகிரங்கமாக அறிவித்தால் போதுமானது.
காமராஜரின் படத்திற்கு மாலை அணிவிப்பது போன்ற போலித்தனங்களில் நீங்கள் ஈடுபடாதீர்கள் !!
- யா.சு.கண்ணன்





