December 5, 2025, 12:02 PM
26.9 C
Chennai

அமெரிக்க அதிபரின் அடுத்த அடாவடி! இனி ‘தேர்வு’ கடினமே!

trump h1b begging - 2025

அடுத்த குண்டு அக்டோபர் 20.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த அதிரடியாக US-CS எனும் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதாவது இது அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இத்தேர்வு முறையில்… வெற்றி பெறுபவர்களுக்கு மாத்திரமே யுனைடெட் ஸ்டேட்ஸ் என்கிற நாட்டின் குடியுரிமையை பெற தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக மிக கடினமான தேர்வு முறைகளை புகுத்தி இருப்பதாக பலரும் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

முதல் எல்லாம் சம்பிரதாயமாக அடிப்படை ஆங்கில அறிவு மற்றும் அமெரிக்க ஆங்கில பேச்சு வழக்கு தெளிவு இருந்தால் போதும், என்பதை சோதிக்கும் விதத்தில் ஒரு தேர்வு முறையை வைத்து இருந்தார்கள்….. அமெரிக்க குடியுரிமை பெற…

அதில் தான் தற்போது டிரம்ப் நிர்வாகம் மூக்கை நுழைத்து கதக்களி ஆடி இருக்கிறார்கள். இருபது கேள்விகளுக்கு பன்னிரண்டு சரியாக இருக்க வேண்டும். அதற்கு முன்னதாக 128 கேள்விகளுக்கு குறித்த நேரத்திற்குள் சரியான விடை கொடுக்க வேண்டும்….. அப்போது தான் இரண்டாம் தாளில் வரும் அந்த இருபது கேள்விகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்பது போல் வடிவமைப்பு செய்து இருக்கிறார்கள். இதன் மாதிரி அமைப்பும் வெளியிடவில்லை…., முன்பு இருந்தது. நேர நிர்ணயம் எதன் அடிப்படையில்…. இணைய வழியில் தேர்வா… அல்லது நடத்தப் போகும் அமைப்புக்கு, அதிகாரம் என்ன என்பதெல்லாம் விசா நடைமுறையோடு சம்மந்தப்பட்டது என சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.

கடந்த ஆண்டு மட்டுமே சுமார் 8,08,000 பேர் வரை நம் இந்திய குடிமக்கள் அமெரிக்காவில் குடியேறி இருப்பதாக புள்ளி விபர தரவுகள் சொல்கின்றன….. இவ்வாண்டு டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் குடியுரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறார்களாம்….. இதில் இந்திய மக்கள் சுமார் 57% பேர் என்கிறார்கள்.

ஏற்கனவே கோல்டன் விசா வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் H1B விசா மற்றும் H4 விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்து பலரை கொந்தளிக்க செய்திருக்கிறது டிரம்ப் நிர்வாகம். அதிலும் குறிப்பாக இந்தியர்களை என்கிறார்கள். ஏனெனில் இந்த விசா நடைமுறையில் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்கள் தான்…. கிட்டத்தட்ட 70% பேர் பாதிக்கப்படக்கூடும் என்கிறார்கள்.

அடுத்த இடியாக இந்த US-CS தேர்வு வந்து சேர்ந்திருக்கிறது.

இவையெல்லாவற்றுக்கும் நம் அமெரிக்க பெரியார் பீட்டர் நவ்ரோ பின்புலத்தில் இருப்பதாக பலரும் பொருமிக் கொண்டு நிற்கிறார்கள். இவருக்கு தற்சமயம் அமெரிக்க அதிபரின் பொருளாதார பிரிவு ஆலோசகர் என்கிற பதவி கொடுத்து கூடவே வைத்து கொண்டு இருக்கிறார் டிரம்ப். ஏடாகூடமான யோசனைக்கு பேர் போனவர் இந்த நவ்ரோ. பழமைவாத கிருஸ்துவ அடிப்படைவாதி என பெயர் எடுத்தவர். நம்மூர் ஆட்களை மருந்துக்கும் ஆகாது இவருக்கு… அமெரிக்க உச்ச பதவிகளில் இந்தியர்கள் பலர் கோலோச்ச ஆரம்பித்து விட்டனர் என ஆர்ப்பரிப்பவர்…… அதை எதிர்கொள்ளும் (நண்டு சிண்டு) வேலைகளில் தற்போது இறங்கி இருப்பதாக இவரே கூறிக் கொள்கிறார். சுலபமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்மூர் வீரமணி வேலைகளில் கை தேர்ந்தவர்……. ஒரு மாற்றாக நவ்ரோ இந்தியர்….. இந்தியர்….. என நடு இரவிலும் புலம்பிக் கூடியவர்.

அடுத்ததாக என்ன நடக்கும்…..?!?!

அக்டோபர் 20 பிறகான விண்ணப்பப் படிவத்தில் தான் இந்த தேர்வு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது….. அதுவரையில் பழைய நடைமுறை தொடரும் என பொடி வைத்து இருக்கிறார்கள்.

ஏன் இப்படி….????

இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை சதவீதம் பேர் முண்டியடித்து விண்ணப்பிக்க இருக்கிறார்கள் என்பதை அவதானிக்க போகிறார்கள் அதில் இந்தியர்கள் எத்தனை சதவீதம் பேர் என கணக்கிட இருக்கிறார்கள். ஏற்கனவே H1B விசா நடைமுறைக்கு கொண்டு வரும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து இட்டுயிருக்கும் நிலையில் இந்த அமெரிக்க குடியுரிமை விண்ணப்பப் படிவம் முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்காவில் வேலை பார்க்க H1B, H4 விசா நடைமுறையில் உள்ளது…. அமெரிக்க குடியுரிமை பெற்றுக் கொண்டு அங்கேயே நிரந்தரமாக குடியேற US-CS வழிவகை செய்கிறது.

இந்த இரண்டு முறைகளை தாண்டி அமெரிக்காவில் வாழ்வது நடைமுறை சாத்தியம் இல்லை.

அப்படியான சூழ்நிலையில் இந்த கெடுபிடிகள் அத்தனையும் இந்தியர்களை குறிவைத்தே என்கிறார்கள். அமெரிக்கா வாழ் இந்தியர்களை கொண்டு நம் இந்திய தேசத்தை வழிக்கு கொண்டு வர நினைக்கிறது அமெரிக்கா.ஆயுத வியாபாரம் படுத்து விட்டது என்பதனால் விவசாய பொருட்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. பாதிக்கு முக்கால் பாகம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் கொண்டே விவசாயம் பார்க்கிறது அமெரிக்கா. சகட்டு மேனிக்கு மரபணு மாற்றம் செய்து இருக்கிறார்கள் அவர்கள். தாவர விலங்கின கலப்பு அதில் பேர் போனது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….

இந்த விஷயத்தில் சீனர்கள் தான் கில்லாடிகள்…. அவர்கள் மரபணு விதைகளில் வீர்யம் உள்ளனவற்றை கண்டறிந்து மேம்படுத்தல் செய்து பயிரிட்டு வருகின்றனர். உரங்களை உபயோகிப்பது வெகுவாக குறைந்து விட்டனர். இந்த மகசூலுக்கு அரபு நாடுகளில் ஏக கிராக்கி….கனடா வரை இதன் வீச்சு உண்டு.இதனால் அமெரிக்க விளைச்சல் நாளுக்கு நாள் தேக்கமடைந்து வருகிறது.அவற்றை சரிகட்ட நம் இந்திய தேசத்தை குறிவைத்து இருக்கிறார்கள்.

உலக அளவில் இந்திய பால் மற்றும் அது சார்ந்த உற்பத்தி பொருட்கள் முதல் இடத்தில் இருக்க… அமெரிக்கா, பால் சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்களுக்கான சந்தையை திறந்து விடச் சொல்லி நிர்பந்தித்து வருகிறது டிரம்ப் நிர்வாகம். அடுத்ததாக மரபணு மாற்றப்பட்ட தானிய பயிர் வகைகள் மற்றும் பார்லி ஒட்டு இன வீர்ய விதைகளை இந்தியாவில் பயிரிட அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் அவர்கள்.

இவையெல்லாம் உணவு தேவைகளை தாண்டி மது உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இடம் கொடுக்க வில்லை என்றதும்….. இந்திய தேசத்தை போதை பொருள் வர்த்தகம் சார்ந்த நாடுகளின் பட்டியலில் இந்த வாரம் சேர்த்து அறிவித்திருக்கிறார்கள். எத்தனை சில்லுண்டிதனம்….

இவற்றுக்கெல்லாம் நம் இந்திய பிரதமர் என்னவிதமான எதிர்வினை ஆற்றி இருக்கிறார்…..?!?!

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க டீப் ஸ்டேட் வகையறாக்கள் மூலம் கொடுத்துவந்த… விவசாயிகள் போராட்டத்தை நாசுக்காக கையாண்டு வெற்றி கொண்டார். டிரம்ப் நிர்வாகத்தின் அடாவடித்தனமான அமெரிக்காவுக்கு இந்திய உற்பத்தி சந்தையை திறந்து விட முடியாது என தீர்த்து சொல்லி அதிரடித்திருக்கிறார். ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிட முடியாது என்கிறார்.

மொத்தத்தில் அடிபணிய முடியாது…..ஆனதை பார்த்துக் கொள்ளலாம் என வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

இது அமெரிக்காவை கொந்தளிக்க செய்திருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் மேற்கொண்ட விசா மற்றும் குடியுரிமை சமாச்சாரங்கள்.

இதில் இந்தியா சாதிக்குமா….????
நிச்சயமாக அந்த கவலையே வேண்டாம்.

ஏனெனில் தற்போதைய இந்திய முன்னெடுப்புகள் அத்தனையும் பின்னிணைப்பில் டாலர் எனும் கரன்சியை குறிவைத்தே பதம் பார்த்து வருகிறார்கள்.

உதாரணமாக டிரம்ப் நிர்வாகம் உலக அளவில் இரண்டு நாடுகள் மீது மட்டுமே சுமார் 50% வரிவிதிப்பு செய்து நடைமுறை படுத்தியது. ஒன்று இந்தியா மற்றொன்று பிரேசில். இது வெளிப்பார்வைக்கு…

ஆனால் இது பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள்.BIRCS என்கிற ஆங்கில சொல்லின் B பிரெசிலை குறிக்கும் I இந்தியாவை குறிக்கும். இவர்களின் அடிநாதம் RIC. அதாவது ரஷ்யா,இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் ஒன்றிணைந்து முதலில் உருவாக்கியது தான் ரிக். இன்றைய தேதியில் பிரிக்ஸ் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் ஆக வளர்ந்து நிற்கிறது…..

இன்றைய தேதியில் இந்த கூட்டமைப்பில் 21 நாடுகள் அதிகாரபூர்வமாக ஒன்றிணைந்து இருக்கிறார்கள்…… உலகப் பொருளாதாரத்தில் சுமார் 68% சதவீதமும் உலக மக்கள் தொகையில் 73% இந்த குடையின் கீழ் வருகிறார்கள். இவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் உண்டென்றால் அது நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மாத்திரமே.

இது அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இவரும் சொல்லி வைத்தார் போல இணைய வழி கரன்சியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இன்று உலக அளவில் பல நாடுகளில் UPI ஏற்றுக் கொள்ளப்பட்டு கோலோச்ச ஆரம்பித்து விட்டது.கொஞ்சம் கொஞ்சமாக டாலர் டல்லடிக்க ஆரம்பித்து விட்டது.

அதன் பொருட்டே நம் கைகளை கொண்டே நம் கண்ணை குத்தும் விதமாக அமெரிக்க வாழ் இந்தியர்களை கொண்டே நம் இந்திய தேசத்தை பதம் பார்த்து விடலாம் என பகல் கனவு காண ஆரம்பித்து இருக்கிறார்கள் டிரம்ப் தரப்பில்…..

நடக்கும் அத்தனைக்கும் இதுவே மூல காரணம்.

நம் இந்திய பிரதமரும் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வரும் தீபாவளி திருநாளுக்கு கூடுமானவரை நம் இந்திய உற்பத்தி பொருட்களையே வாங்கிட பாருங்கள்….. அதற்கே முன்னுரிமை கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனெனில் அந்நிய செலாவணி இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சற்றேறக்குறைய சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் புழங்கி வருகிறது… இவற்றை நம்மால் வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும் என்கிறார் அவர். மறைமுகமாக இது அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட சவால் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….

தற்சார்ப்பில்… தன்னிறைவு கண்டு ஏற்றுமதிக்கான வழிவகைகளை ஆராய்ந்திட பாருங்கள், இந்த அரசு அதற்கு துணை நிற்கும் தேவையான அனைத்திற்கும், ஆவண செய்யும் என உறுதி அளித்திருக்கிறார்.

இவையெல்லாம் மிகப் பெரிய முன்னெடுப்பு சமாச்சாரங்கள். புரிந்துக்கொள்ள பாருங்கள்.

அதைவிடுத்து மித்ரோன்…… என மேடையில் நின்று அலப்பறை கொடுக்கும் கழிசடைக்கெல்லாம் செவி சாய்க்க வேண்டாம். அந்த பன்னாடைக்கு இந்த பத்து ஆண்டுகளில்… பன்னிரெண்டு ஆண்டுகளில் எந்த ஒரு நல்லதும் கண்ணுக்கு தெரியவில்லை என்பதாக எடுத்து கொண்டு நகர்வதே சாலச் சிறந்தது. நாட்டின் நலன் சார்ந்த சமாச்சாரங்களில் அக்கறை கொண்டவர்களுக்கு நிச்சயம் நாட்டின் தற்போது உள்ள நிலை புரியும். அது போதும்.

  • ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories