
இந்த முத்திரை “நாக ஹஸ்தா கம்பனா” என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு நாகப்பாம்பின் அசைவைப் போல விரல்களை நடுங்கச் செய்கிறது.
குண்டலினி சக்தியை எழுப்புகிறது.
பிராண சக்தி நம் உடல் முழுவதும் பாய வழிவகை செய்து உதவுகிறது.
உடலில் உள்ள ‘தமஸ்’ எனப்படும் எதிர்மறை ஆற்றலைக் குறைக்கிறது.
உபநிடதங்களின்படி தெய்வீக ஐக்கியத்திற்கு நம்மை உட்படுத்துகிறது.
இந்த வயதிலும் இந்த மாமனிதர் பூரண உடல் நலத்துடன் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் யோகா.
- புத்துராஜ் கௌடா
நாக ஹஸ்த கம்பனா
- கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (ஆசிரியர் கலைமகள்)
நாக ஹஸ்த கம்பனா– என்பது ஒரு யோகா பயிற்சி ஆகும், இது பாம்பின் அசைவைப் போன்ற கைகளின் நடுக்கம் மற்றும் விரல்களின் அசைவுகளைப் பயன்படுத்தி “குண்டலினியை” எழுப்புவதையும், “பிராண சக்தி”யை உடலுக்குள் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உடலில் உள்ள ‘தமஸ்’குணத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க உதவுகிறது!
இடுப்பு வரை மனித உடலும், இடுப்பிற்குக் கீழ் பாம்பு உடல் கொண்ட பதஞ்சலி முனிவர், இலக்குவன், பலராமன் ஆகியோர் ஆதிசேஷனின் அம்சமாக பிறந்தவர்கள் என ஹிந்து புராணங்கள் கூறுகின்றன. இறைவனை வணங்கும் பொழுது மேலிருந்து கீழாக இரண்டு கைகளையும் கூப்பி வளைந்து வளைந்து வணங்கினால் நம்மை சுற்றியப் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும்! சித்தர்களின் அருளும் கிடைக்கும்.
சித்தர்களில் ஒருவரான போகர் 7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால் தனக்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார்.
மேலே ஏறிப் பார்! கீழேயும் இறங்கிப் பார்
ஆனால் என்னைப் பிறப்பித்தவர்
காலங்கி நாதர்!
பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னதைப்
பார், இதுவே சரியான வழி! பறப்பதும் நீந்துவதும் அசைவில் தெரியும் அற்புதம். (சித்தர் பாடல் நமக்கேற்றபடி பொருள் கொள்ளலாம்)
நாகர்கள் இந்து சமய புராணங்களில் தெய்வீக சக்தியுள்ள தேவதைகளாக கருதப்படுகின்றன. ஆண் பாம்புகள் நாகர்கள் என்றும் பெண் பாம்புகள் நாகினிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தேவர்களின் அரசனான இந்திரன், நாகர்களின் நண்பர் ஆவார். பல்லாண்டுகளாக நாக வழிபாடு இந்து சமயத்தில் இருந்து வருகிறது.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெற பாற்கடலில், மந்தர மலையை நிறுவிக் கடைவதற்கு வாசுகி என்ற நாகத்தை கயிறாகப் பயன்படுத்தினர். நாகத்தை வழிபட்டால் அமிர்தமும் கிடைக்கும் சிவபெருமானின் அருளும் கிடைக்கும் ஏனென்றால் சிவபெருமானின் கழுத்தில் வாசுகி என்ற பாம்பு தான் இடம்பிடித்து இருக்கிறது!! என்னிடம் உள்ள குறிப்புகளில் இருந்து விவரங்களைத் தந்திருக்கிறேன்.





