வேர்களை விட்டு விட்டு கிளை பரப்ப படாத பாடுபடும் பாஜக…

அந்தம்மா பிராமண சமுதாயத்துக்குனு ஏதாவது நல்லது பண்ணிச்சோ இல்லையோ ? ஆனால் தமிழகத்தை பொறுத்த மட்டில் அந்தம்மாவ தான் பெரும்பான்மையான பிராமணர்கள் தங்கள் அடையாளமா பிரதிநிதியா பார்க்க ஆரம்பிச்சாங்க..

இடை பட்ட காலத்தில் இந்துமுன்னணியும் சங்கமும் எவ்வளவோ விஷயங்களில் பிராமணர்கள் வஞ்சிக்கப்படும் போது வன்மையாக அவமானப்படும் போதும் கண்டிச்சிருக்காங்க..

ஏன் மறியல் ஆர்ப்பாட்டம் கண்டன ஊர்வலம் எல்லாம் கூட நடத்தியிருக்காங்க ஆனால் பாதிக்கும் மேற்பட்ட பிராமணர் சமூகம் தன்னோட அபிமானத்தை சிறிது கூட அம்மாவிடமிருந்து நகர்த்தலை அம்மாவோட விசுவாசிகளாவே இருந்தாங்க…

பாஜக கூட இவ்விஷயத்துல பல தடவை தோத்து போச்சு.. காரணம் தனக்கு நல்லது நடக்காட்டினா கூட பரவாயில்லை தன்னை சமூகத்தில தொந்தரவு செய்யாம இருந்தாலே போதுங்கிற சிந்தனை பிராமணர்களிடம் மேலோங்கி இருந்ததே.

அது போன்றே அந்த அம்மாவோட ஆட்சி காலத்துல பிராமணர்களுக்கு பெரும்பாலும் பூணல் அறுக்கிறது குடுமிய அறுக்கிறதுனு எதுவும் நடந்ததில்ல.. அந்தம்மா இறந்ததுக்கப்புறம் தனக்கிருக்கிற ஒரே வழி பாஜக ஆதரவு தான்… அப்படியே தான்
இப்போ வரைக்கும் செயல்பட்டு வருகிறார்ர்கள்..

ஆனால் தற்போது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை போலவே அத்தகைய சமூகத்தை கண்டு கொள்வதோடு மட்டுமல்லாமல் ஒதுக்கவும் ஒதுங்கவும் செய்து வருகிறது பாஜக

இது போன்ற நிகழ்வுகளை சமுதாயத்தில் மட்டுமில்லை அதன் கட்சி நிர்வாகத்தில் கூட செயல்படுத்தி வருகிறது. தகுதியும் பண்பும் இருந்தும் கூட பிற சாதி சமய மக்களை கவரவும் பாஜகவை யாரும் பார்பனர் கட்சி என்று சொல்லி விடக்கூடாது என்ற சுயநலத்தினாலும் பலரை பல பிராமணர்களை மேல்மட்ட பொறுப்பிற்கு உட்படுத்தாமல் தட்டிக் கழிக்கிறது.

நானும் திட்டியிருக்கிறேன் ஸ்டாலினுக்கு திலகமிட்ட பட்டரை ஆனால் அதற்கும் இங்கு சிலர் பேசும் பேச்சுகளுக்கும் நிறைய பேதமிருக்கிறது

ஒட்டு மொத்த வர்க்கத்தையே அவமானப்படுத்தி பேசுவது. திராவிடர் கழகத்தின் அறுவெறுக்கத்தக்க செயல்களையே மிஞ்சுவதாய் உள்ளது…

அவன் கையில அகப்பட்டா குடுமியும் பூணலும் தான் அறுபடும் ஆனா உங்க கையில மாட்டினா உசுரையே எடுத்துறுவீங்க

– மீனம் ஐயப்பன்