காலம் தாழ்த்தும் விஜயகாந்த்! தேமுதிக.,வில் ஊடுருவிய திமுக.,!

Published:

Vijayakanth stalin meet - 2026

அதிமுக., கூட்டணியிலும் சேர இயலாமல், திமுக.,விடமும் செல்ல முடியாமல் இட பேரம் நடத்திக் கொண்டிருக்கும் தேமுதிக.,வில் இப்போது திமுக., ஊடுருவியுள்ளது. விஜயகாந்த் முடிவு எடுக்காமல் இருப்பதற்கு தேமுதிக தொண்டர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என சில தேமுதிக தொண்டர்கள் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சுதீஷிடம் வலியுறுத்தினராம்.

சுதிஷிடம் பேசிய அவர்கள், திமுக கூட்டணிக்கு செல்வதால் மக்களிடம் செல்வதில் சிரமம் இருக்காது; மோடி மற்றும் அதிமுக அரசுக்கு எதிரான பிரசாரம் தற்போது தமிழகத்தில் எடுபடும்; கடந்த தேர்தலில் மோடி அலை இருந்த போதே வெற்றி வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில் தற்போது விபரீத முடிவு எதுவும் எடுக்க வேண்டாம்’ என்று கூறியுள்ளனராம்.

விஜயகாந்த் காலம் தாழ்த்திக் கொண்டிருக்க, முதலில் காங்கிரஸின் திருநாவுக்கரச் தூது வந்தார். பின்னர் ஸ்டாலினே நேரில் வந்தார். திடீரென ரஜினிகாந்த், சரத் குமார் என்று நடிகர் பட்டாளம் வந்தது. இப்போது தொண்டர் படையில், திமுக., தொண்டர்கள் ஊடுருவியுள்ளனர் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

Related articles

Recent articles

spot_img