Samsung Galaxy F23 5G - 2026

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி: சிறப்பம்சங்கள்..!

வணிகம் அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
Samsung Galaxy F23 5G - 2026

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனை மார்ச் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது அக்வா ப்ளூ வண்ண விருப்பத்தில் காணப்படுகிறது. பிளிப்கார்ட் பட்டியல் இந்த சாதனம் ஃபாரஸ்ட் க்ரீன் வண்ண வகைகளில் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் கேலக்ஸி F சீரிஸ் மாடல்களில் இதுவரை வழங்கப்படாத இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது.

புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் கேமிங் மற்றும் ஸ்டிரீமிங் போன்ற சேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என சாம்சங் தெரிவித்து இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடல் வெளியீடு குறித்து ப்ளிப்கார்ட் மைக்ரோசைட் மற்றும் சாம்சங் இந்தியா வலைதளங்களில் சிறப்பு வலைப்பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நேரடி படங்களை Taknikiworld என்ற டுவிட்டர் பயனர் பகிர்ந்துள்ளார். வெளியான படங்கள் வரவிருக்கும் கேலக்ஸி எஃப்23 ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் பேனல்கள் இரண்டையும் காட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் இருக்கும் எனவும் பின்புறத்தில் எல்இடி ப்ளாஷ் உடன் மேல் இடது மூலையில் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் FHD, இன்ஃபினிட்டி வி ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடலின் விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பிளிப்கார்ட்டில் சாம்சங்கின் மைக்ரோசாஃப்ட் படி, டிஸ்ப்ளே ஆனது கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டிருக்கும் எனவும் இந்த சாதனத்தின் முன்புறத்தில் செல்பி கேமரா சென்சார் உடனான வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

சாம்சங் கேலக்ஸி F23 5ஜி அம்சங்கள்

  • FHD 120Hz டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
  • 6GB ரேம்
  • ஆண்ட்ராய்டு 12
  • 48MP பிரைமரி கேமரா
  • 8MP அல்ட்ரா வைடு கேமரா
  • 5MP டெலிபோட்டோ கேமரா
  • 16MP செல்ஃபி கேமரா
  • 6000mAh பேட்டரி
  • 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.