பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சங்களைத் தொட்டன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அண்மையில் 38 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 38 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் வர்த்தகம் முடிவடைந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தொடக்கத்திலேயே 38 ஆயிரத்து 75 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
தொடர்ந்து உயர்ந்த சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 38 ஆயிரத்து 260 புள்ளிகளை கடந்தது- அதேபோன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி முந்தைய வர்த்தகத்தின்போது 11 ஆயிரத்து 470 புள்ளிகளில் முடிவடைந்த நிலையில் இன்று சுமார் 75 புள்ளிகள் உயர்ந்து அதிகபட்சமாக 11 ஆயிரத்து 545 புள்ளிகளைத் தொட்டது. எல் அண்ட் டி., எச்.டி.எஃப்.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பங்குகள் இன்று உயர்வடைந்தன. ஆசியப் பங்குச் சந்தைகள் உயர்வு எதிரொலி உள்ளிட்டவற்றால் இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வடைந்துள்ளன



