ஷாருக்கானும், சூர்யாவும் மாதவனுடன் இணையும் ராக்கெட்ரி !

Published:

 

madi - 2026ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள ராக்கெட்ரி – நம்பி விளைவு (Rocketry – The Nambi Effect) படத்தில் கதாநாயகான நடித்தது மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார் மாதவன். இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழரான நம்பி நாராயணன், நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர்.nambi - 2026இஸ்ரோ விஞ்ஞானியாகப் பணியாற்றிய நம்பி நாராயணன், வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 1994ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். எனினும், நம்பி நாராயணன் மீது பொய் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, வழக்கில் இருந்து அவரை சிபிஐ விடுவித்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு 8 வாரத்துக்குள் ரூ.50 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கேரள அரசுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி உத்தரவிட்டது. அவர் மீதான கைது நடவடிக்கை தேவையற்றது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனினும் இதன்படி, ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகையை நம்பி நாராயணனுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது..தனக்கு நடந்த சம்பவங்களை ‘ரெடி டூ பையர்: How India and I survived the ISRO spy case’ என புத்தகமாகவும் எழுதியுள்ளார் நம்பி.nambi 1 - 2026மாதவனும் சிம்ரனும் 2002-ல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன்பிறகு இந்தப் படத்தில் தான் மீண்டும் ஒன்றாக நடிக்கிறார்கள்.ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இப்படத்தை இயக்கி வருகிறார்madi sharuk - 2026இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு பாரீஸ், பெல்கிரேடு செல்ல உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆச்சு அசல் அச்சு அசலாக நம்பி நாராயணனாகவே மாறியிருக்கிறார் நடிகர் மாதவன். இப்படத்தில் நடிகை சிம்ரன் திருமதி நம்பி நாராயணனாக நடிக்கிறாராம். surya madi - 2026அதுமட்டுமல்லாமல் டைட்டானிக் படத்தில் நடித்த ரான் டோனாச்சி இதில் நடிக்கிறார் சிறப்புத் தோற்றத்தில் ஷாருக்கான், சூர்யா நடிக்கின்றனர். நம்பி நாராயணனை பேட்டி காண்பவர்களாக இந்தி பதிப்பில் ஷாருக்கானும், தமிழ் பதிப்பில் சூர்யாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img