வரலட்சுமி முதல் முறையாக ஒரு ‘பெண்’ணாகவே நடிக்கும் படம்..!

கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
varalakshmi kanirasi - 2026

வரலட்சுமி முதல்முறையாக ஒரு பெண்ணாகவே நடிக்கும் படம் இது என்று ரோபோ ஷங்கர் அண்மையில் கன்னிராசி பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பொதுவாக அடாவடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், கன்னிராசி படத்தில் மிகவும் சாந்தமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.

கன்னிராசி படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்தப் வெளியீட்டு விழாவில் பேசிய ரோபோ சங்கர், இந்தப் படத்தில் முதல்முறையாக வரலட்சுமி பெண்ணாகவே நடிக்கிறார் என்று கூறினார்.

kanni rasi 1 - 2026

அதைக்கேட்டதும் அங்கே அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது! வரலட்சுமியும் வெட்கத்துடன் சிரித்து வைத்தார்.

இதுகுறித்து பின்னர் வரலட்சுமியிடம் கேட்டபோது, “சிறு வயதில் இருந்தே நான் தைரியமாக பெண்ணாக வளர்ந்து வந்தேன்! பயம் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது! பள்ளி நாட்களில் கூட என்னையோ தோழிகளையும் இளைஞர்கள் யாராவது கிண்டல் அடித்தால் கூட நாங்கள் அடித்து விடுவோம்” என்று அதிரடியாகக் கூறி அதிர வைத்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.