
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மற்றவர்களின் உருவத்தை கேலி செய்வதை நடிகை ஸ்ரீபிரியா கண்டித்துள்ளார்.
நடிகை ஸ்ரீபிரியா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப் பொருப்பில் இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூகத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும், சின்னத்திரை நிகழ்ச்சிகள் குறித்தும் டிவிட் செய்வது வழக்கம்.
குறிப்பாக விஜய் டிவி நிகழ்ச்சிகளை அவர் பார்த்து ரசிக்கிறார் என்பது அவரின் டிவிட்டுகளில் இருந்து தெரியும். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து கருத்து கூறி வரும் நடிகை ஸ்ரீபிரியா, யார் நேர்மையாக விளையாடுகிறார்கள்? யார் ஏமாற்றுகிறார்கள் என்பதை மிகவும் சரியாக கனித்து கூறுகிறார்.

விஜய் டிவியின் தொகுப்பாளர்களான மாகாபாவும் பிரியங்காவும் மற்றவர்களை உருவ கேலி செய்து கிண்டலடித்துள்ளனர். இதனை நடிகை ஸ்ரீபிரியா கடுமையாக கண்டித்து, ட்விடில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உருவகேலிக்கு எதிராக அவர் பல டிவிட்டுகளையும் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, விஜய் டிவி சூப்பர் சிங்கரில் ஒருவரின் மூக்கை கேலி செய்வதும்,எடையை கேலி செய்வதும் சரியில்லை, மகாபா, பிரியங்கா உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை, நீங்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்ளுங்கள் மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது #உருவகேலியைஎதிர்போம். என்று கூறியிருக்கிறார்.
நேரம் கிடைக்கும் சமையங்களில் நான் அதிகம் பார்ப்பது விஜய்டிவி தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது சோகம்.. மாற்றிக்கொள்வார்களா? ஒருவரின் உருவத்தைக் கேலி செய்து காமெடி செய்வது கேவலம்! என்று கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை ஸ்ரீபிரியா.
என்னுடன் டிவிட்டரில் இணைந்து நிற்க்கும் 495.8 ஆயிரம் மக்களும் உருவகேலியை எதிர்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும், நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன், இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன். உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்! என்று அழைத்திருக்கிறார் நடிகை ஸ்ரீபிரியா.
நேரம் கிடைக்கும் சமையங் களில் நான் அதிகம் பார்ப்பது #விஜய்tv தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது சோகம்…
— sripriya (@sripriya) September 7, 2019
மாற்றிக்கொள்வார்களா?1வரை கேலி செய்து comedy செய்வது கேவலம்!
#vijaytvsupersinger ல்1வரின் மூக்கை கேலிசெய்வதும்,எடையை கேலிசெய்வதும் சரியில்லை,#makapa #priyanka உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை,நீங்கள்1வரை1வர் கேலி செய்து கொள்ளுங்கள் மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது #உருவகேலியைஎதிர்போம்
— sripriya (@sripriya) September 7, 2019
என்னுடன்twitterல் இனைந்து நிற்க்கும்495.8kமக்களும் #உருவகேலியைஎதிர்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும்,நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன்,இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்!
— sripriya (@sripriya) September 7, 2019



