
நடிகை சுஷ்மிதா சென் அவருடைய மகள்கள் மற்றும் காதலரோடு மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1994ஆம் ஆண்டில் மிஸ் யூனிவெர்ஸ் பட்டம் வென்றவர் நடிகையும் மாடல் அழகியுமான சுஷ்மிதா சென். அவர் சில இந்திப்படங்களிலும், தமிழில் ரட்சகன் படத்திலும், பின்னர் முதல்வன் படத்தில் ஒரு பாடலும் நடித்துள்ளார்.

சுஷ்மிதா சென் தற்போது அவருடைய குடும்பத்தினருடன் விடுமுறைக்காக மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது விடுமுறையை சந்தோஷமாக கழிக்கிறார். அவர் தற்போது அவருடைய மகள்கள் மற்றும் காதலரோடு மாலத்தீவில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் துணுக்குகளை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பல சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

தற்போது 43 வயதாகும் சுஷ்மிதா சென் பல தோற்றங்களில், வித்தியாசமாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த கிளிக்குகளில் மாலத்தீவின் அழகிய வெள்ளை மணல், மேக கூட்டங்கள், நீல கடல் என்று பார்க்க மிகவும் அழகான ஒரு சூழலாக இருக்கிறது.



