காமசூத்ரா வெப்சீரிஸில் சன்னிலியோன்!

சினி நியூஸ் சினிமா
sanni - 2026

சன்னி லியோன் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறாராம்.

மீரா நாயர் இயக்கி ரேகா, இந்திரா வர்மா இணைந்து காமத்தில் கலக்கிய ‘Kamasutra A Tale of Love’ என்ற படத்திற்குப் பிறகு வரும் தொடராக இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்படவுள்ளதாம். ஏக்தா கபூர் இந்த வெப் சீரிஸை தயாரிக்கவுள்ளார். அதில்தான் சன்னி லியோன் நடிக்கப் போகிறாராம்.

இந்த வெப் சீரிஸ் தொடர்பாக ஏக்தா கபூரும், சன்னி லியோனும் பல மாதங்களாக பேசிக் கொண்டுள்ளனராம்.. சீரிஸின் கதையை கேட்டு பிடித்திருக்கிறது என்று சொல்லியுள்ளாராம் சன்னி லியோன். கொள்கை அளவில் நடிக்க ஒப்பும் கொண்டுள்ளாராம். இந்த இரண்டு பேரும் இணைவது இது முதல் முறையல்ல.. இதற்கு முன்னாடி ராகினி எம்எம்எஸ் என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

sanni 1 - 2026

அப்போதே சன்னி லியோனுக்கு ஏற்றார் போல கதையை உருவாக்க யோசித்தாராம் ஏக்தா. அதன் விளைவுதான் இந்த காமசூத்ரா வெப் சீரிஸ். இப்போது எடுக்கப் போகும் வெப் சீரிஸில், ராஜஸ்தானைச் சேர்ந்த தேவதாசி பெண்களான கோலி சமூகப் பெண்கள் குறித்த கதையை தொடராக எடுக்கவுள்ளாராம் ஏக்தா கபூர். இந்த பெண்கள் அந்தக் காலத்து ராஜாக்களுக்கு பாலியல் அடிமைகளாக இருந்தவர்களாம்.

வாத்சாயனர் எழுதியதுதான் காமசூத்ரா. இதை வைத்து சமீப காலமாக நிறையப் படங்கள் வர ஆரம்பித்துள்ளன.. அதில் மீரா நாயர் இயக்கிய ‘Kamasutra A Tale of Love’ படம் பெரும் பரபரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.. அடேங்கப்பா. ரேகாவா இப்படி நடிச்சது என்று பலரையும் வியக்க வைத்திருப்பார் ஜெமினி கணேசனின் மகள்.

இந்தப் படம் 1996ம் ஆண்டு சான் செபாஸ்டியன் சர்வதேச பட விழாவில் கோல்டன் சீஷெல் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. கேன்ஸ் பட விழாவிலும் திரையிடப்பட்டது. அதேசமயம், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இதை தடையும் செய்தார்கள்.

சரி அதை விடுங்க.. இப்ப சன்னி லியோனை வைத்து காமசூத்ராவை கையில் எடுக்கிறார் ஏக்தா கபூர். சன்னி லியோன் ஒரு செக்ஸ் பட நடிகையாக இருந்தவர். எனவே இந்த காமசூத்ராவில் ஒரிஜினாலிட்டிக்கு பஞ்சமிருக்காது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.