ஏடிஎம் கார்டு பின் நம்பர் தெரிந்ததால்… உடன் வேலை செய்த நண்பனைக் கொன்று பணம் எடுத்தவன் கைது!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
murder - 2026

கோட்டா: சக ஊழியரைக் கொன்றது, ஏடிஎம் கார்டைத் திருடியது மற்றும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 60,000 ரூபாய் எடுத்தது ஆகியவற்றுக்காக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பண்டி மாவட்டத்தில் உள்ள ஆர்னெட்டா கிராமத்தில் வசிக்கும் 32 வயதான ராஜ்குமார் மேக்வால் என்பவரை கொலை செய்ததற்காக சங்கோட் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ராஜ்குமார் மேக்வாலின் சிதைந்த உடல் அனந்த்புரா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ரான்பூர் பகுதியில் புதர்களில் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலை கற்களால் நசுக்கி, தாக்கப்பட்டு சிதைக்கப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நவீனும் ராஜ்குமார் மேக்வாலும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். நவீன் ஒரு முறை ராஜ்குமாரின் ஏடிஎம் கார்டின் ரகசிய பின் எண்ணையும், ரூ. 1.50 லட்சம் அவரது வங்கிக் கணக்கில் இருப்பதையும் தெரிந்து கொண்டான் என்றும், அதை அடுத்தே பணத்தை எடுக்க திட்டம் தீட்டியுள்ளான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த வாரம், நவீன், ராஜ்குமாரை ஒதுக்குப் புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று, தலையை கற்களால் நசுக்கி, உடலை அருகிலுள்ள புதர்களில் வீசியுள்ளான். பின்னர் ராஜ்குமாரின் ஏடிஎம் கார்டை எடுத்து ரூ. 65,000 அதில் இருந்து எடுத்துள்ளான்.

போலீஸார் அவனைப் பிடித்து விசாரித்ததில், இந்த குற்றத்தை செய்ததாக நவீன் ஒப்புக்கொண்டான். விரைவில் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவான் என்று போலீசார் வெள்ளிக்கிழமை இன்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.