க் இல் கிக் அனைகா விக்ரமன்!

சினி நியூஸ் சினிமா
anika - 2026

மாடலிங் அனைகா விக்ரமன் ஹீரோயினாக அறிமுகமாகும் படம் க் தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்குகிறார், நாயகனாக யோகேஷ் அறிமுகமாகிறார், குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர்

ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. படம் பற்றி இயக்குனர் பாபு தமிழ் கூறியதாவது: உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறோம்.

anika 1 - 2026

தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான்.

அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது. அனைகா விக்ரமன் ஹீரோவுக்கு பக்க பலமா இருந்து அவனை மீட்டெடுக்கும் துணிச்சலான பெண் கேரக்டரில் நடிக்கிறார். என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.