திருவாவடுதுறை கோயிலில் ஐப்பசி அசுபதி உட்பிராகார உலா!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
thiruvaduthurai-ula2
thiruvaduthurai-ula2

நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை மாசிலாமணிஸ்வரர் சுவாமி கோயிலில் ஐப்பசி அசுபதி யை முன்னிட்டு குரு மகா சன்னிதானத்தின் முன்னிலையில் உட்பிரகார உலா நடந்தது

நாகப்பட்டினம் மாவட்டம் திரு வாவடுதுறையில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாசிலாமணீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு மாசிலாமணீஸ்வரர் சுவாமி ஒப்பிலா முலையம்மை விநாயகர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து அதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருமூலதேவ நாயனார் மகா தீப ஆராதனையும் நூல் வெளியீடும் உற்சவர் உட்பிரகார உலாவும் நடந்தது

thiruvaduthurai-ula
thiruvaduthurai-ula

இந்த வழிபாட்டில் அரசின் உத்தரவுப்படி ஆன்மீக அன்பர்கள் முக கவசம் அணிந்து வழிபாடு செய்தனர் இக்கோவிலில் புரட்டாசி மாத திருவிழா திருவாதிரை திருவிழா சிவராத்திரி திருவிழா அன்னாபிஷேகம் போன்ற நடைபெறும் முக்கிய கோயிலாகும் தற்போது கரோனா தாக்கம் காரணமாக அரசு உத்தரவுப்படி விதிகளின்படி சன்னிதானத்தின் கண்காணிப்பில் விழாநடைபெற்று வருகிறது

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

மாங்கல்ய தோஷம் புத்திர பாக்கியம் திருமண தடை உள்ளவர்கள் இக் கோவிலில் வழிபட நற்பலன் கிட்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.