spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்இல்லை இல்லை இது உண்மை இல்லை! ஹன்சிகா!

இல்லை இல்லை இது உண்மை இல்லை! ஹன்சிகா!

- Advertisement -
hansika arul

சென்னையில் உள்ள பிரபல கடைகளில் ஒன்றாக சரவணா ஸ்டோர் பல வருடங்களாக இயங்கி வருகிறது. சென்னையில் பல இடங்களில் பல்வேறு கிளைகள் உருவாகிவிட்டது. இதில் முக்கியமான ஒன்று தான் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர். இதன் உரிமையாளர் தான் சரவணன் அருள். இவர் கடை விளம்பரத்திற்காக சினிமா ஸ்டார்களுடன் நடனமாடி மீம்ஸ்களின் மூலமே பிரபலம் ஆனவர்.

இவர் முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா என பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு விளம்பர பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். இதனையடுத்து சமூக வலைத்தளங்கில் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் பரவியது. தற்போது அதற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

hansika

அவருடன் படத்தில் ஹீரோயினாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேசி வந்ததாகவும் இறுதியில் ஹன்சிகா ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் செய்திகள் கசிந்தது.

இந்த தகவல் வைரலான நிலையில் இந்த செய்தியை பார்த்த ஹன்சிகா அதிர்ச்சியுடன் இது உண்மை இல்லை என கூறி அந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதிகார பூர்வமாக தகவல்கள் கிடைக்கும் வரை இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe