யாஷிகா ஆனந்தின் கார் மோதி இளைஞர் படுகாயம்!

Published:

Yashika Anand - 2026

சனிக்கிழமை நள்ளிரவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

2016ம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலம் ஆனார்.

அதன்பின்னர் தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் சனிக்கிழமை நள்ளிரவில் சொகுசுகாரில் சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்தார். நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையோரத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவர் மீது மோதியதுடன் அங்கிருந்த கடை ஒன்றின் மீதும் மோதியது.

yashika - 2026

இதில் ஊழியர் பரத் படுகாயம் அடைந்தார். அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையின்ர வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் காரில் இருந்ததாகவும், விபத்து நிகழ்ந்தவுடன் அங்கிருந்து அவர் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் காரில் இருந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் சொல்கிறார்கள்.காரை ஓட்டிவந்தது யாஷிகா ஆனந்த்தா அல்லது வேறு யார் என்பது குறித்து உறுதியாக தகவல்கள் வெளியாகவில்லை. இதேபோல் யாஷிகா மதுஅருந்தி இருந்தாரா என்பது குறித்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை.

Related articles

Recent articles

spot_img