குடும்ப படம்… குடும்ப படம்.. வாங்க வாங்க..: அழைக்கிறார் பிரியா பவானி சங்கர்!

Published:

priyabavani shankar - 2026

குடும்பப் படம் குடும்பத்தோடு பார்க்கலாம் வாங்க வாங்க என்கிறார் பிரியா பவானி சங்கர்.

ராதாமோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் இணையாக நடிக்கும் படம் பொம்மை. இந்தப் படம் குறித்து பிரியா பவானி சங்கர் கூறுகையில்… குடும்பத்தினர் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக பொம்மை உருவாகியுள்ளது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அருமையான படம்..

எஸ் ஜே சூர்யாவின் குழந்தைத்தனமான மறுபக்கத்தை இந்த படத்தில் பார்த்து ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்!

priya - 2026

தற்போது பிரியா பவானி சங்கர் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். எஸ்.ஜே. சூர்யா ஏற்கனவே சில படங்களில் தனது குழந்தைத்தனமான நடிப்புகளால் பலரைக் கவர்ந்தவர்!

எனவே பொம்மை படத்திலும் எஸ் ஜே சூர்யா வின் வழக்கமான குழந்தைத்தன நடிப்பை பார்த்து ரசிக்கலாம் என்பதை பிரியா பவானி சங்கர் குறிப்பிட்டுள்ளார்!

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img