சசிகலாவின் சிறை நடவடிக்கை: விமர்சிக்கும் ரஜினியின் தர்பார்!

சினி நியூஸ் சினிமா
dharbar 2 - 2026

ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் இன்று வெளியாகி உள்ளது. படத்தில் அரசியல் இருக்காது என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார்.

ஆனால், சசிகலாவை விமர்சிக்கும் வகையில் இரண்டு காட்சிகள் இருப்பது அவரது ஆதரவாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

sasikala 1 - 2026

படத்தில் ரஜினிகாந்த் சிறைக்குள் நடந்து சென்று கொண்டிருப்பார். அப்போது, கைதி ஒருவர் சிறையில் செல்போனில் பேசிக்கொண்டிருப்பார். இதைப் பார்த்த உயரதிகாரியான ரஜினி, வார்டனிடம் ஜெயிலில் செல்போன் எல்லாம் உண்டு போல என்று கேட்பார்.

அதற்கு வார்டன், காசு இருந்தால் போதும் சார், ஷாப்பிங்கே சென்று வரலாம் என்பார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஷாப்பிங் சென்றுவந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது. அதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்த காட்சி இருந்தது.

sasikala - 2026

மற்றொரு காட்சியில், சிறையில் ஆள்மாறாட்டம் நடைபெறும். இது குறித்து ரஜினி உயர் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறுவார். அப்போது அந்த அதிகாரி, “நான்கூட தென் இந்தியாவில் இதே போல் சிறையிலிருந்து ஒரு பெண் கைதி வெளியே போய்வருவதாக கேள்விப்பட்டேன்” என்பார். இதுவும் சசிகலாவை நேரிடையாக நினைவுபடுத்துகிறது.

sasikala 2 - 2026

இந்த இரண்டு காட்சிகளுமே ரஜினிகாந்த் பேசவில்லை என்றாலும், அவர் முன்னிலையில் மற்றவர்கள் பேசுகின்றனர். இதனால் அ.ம.மு.க.வினர் தர்பார் மீது கடுப்பில் உள்ளனர். தமிழர் ராக்கர்ஸ் எப்போது வெளியிடும், அதை பரப்பலாம் என்று காத்திருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.