ஆரோக்கிய சமையல்: வாழைத்தண்டு இட்லி!

Published:

vazhithandu 1 - 2026

வாழைத்தண்டு இட்லி:

தேவையானப் பொருட்கள்:

இட்லி மாவு – 2 கப்

நார் நீக்கி மிகவும் பொடியாக
நறுக்கிய இளம் வாழைத்தண்டு – அரை கப்

உப்பு – அரை டீஸ்பூன்

தாளிக்க :

நெய் – ஒரு டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)

பெருங்காயத்தூள் – சிறிதளவு

vazhaithandu idly - 2026

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் புரட்டி ஆறவிடவும் (சூட்டுடன் போட்டால் மாவு கட்டி தட்டும்).

இதை இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, வழக்கமான இட்லி போல் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Related articles

Recent articles

spot_img