panner - 2026

பனீர் பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – அரை கப்

நீர் – ஒரு கப்

உப்பு – கால் சிட்டிகை

எண்ணெய் – 2 சொட்டு

சுண்டக் காய்ச்சிய பால் – ஒரு கப்

சிறியதாக நறுக்கிய பனீர் துண்டுகள் – 10

ஏலக்காய்தூள் – சிறிதளவு

சர்க்கரை – 50 கிராம்

செய்முறை:

paneer pal kozhukattai - 2026

நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசி மாவு தூவி, கட்டியின்றிக் கிளறவும்.
ஆறிய பின் மாவை சீடை போல் உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

சர்க்கரையுடன் கால் கப் நீர் ஊற்றி சூடாக்கி, கொதி வந்தவுடன் பனீர் துண்டுகள், வேகவைத்து எடுத்த சீடைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

இதனுடன் சுண்டக்காய்ச்சியப் பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending