பட வாய்ப்பிற்கு சென்ற போது 65 வயது தயாரிப்பாளர் டீன்ஏஜான என்னிடம்… நடிகை பாலியல் புகார்!

சினி நியூஸ் சினிமா
rathod 1 - 2026

இந்தியில், சன்சில்க் ரியல் எஃப் எம், ஹோஸ்டேஜஸ், தேரே லியே புரோ உட்பட சில படங்களில் நடித்தவர் நடிகை மஹ்லார் ரத்தோட். இப்போது சீரியல்களில் நடித்துவருகிறார்.

சினிமாவில் வாய்ப்புக்காக, படுக்கையை பகிரும் பழக்கம் இருப்பதாக பல நடிகைகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்காக ஏற்படுத்தப்பட்ட மீ டூ ஹேஷ்டேக்கில் பலர், சினிமா பிரபலங்களை பற்றி ஏற்கனவே பாலியல் புகார் கூறியிருந்தனர்.

rathod 3 - 2026

இந்த புகார் இந்திய சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தி நடிகை மஹ்லார் ரத்தோட், தனது பாலியல் தொல்லை அனுபவங்களை, ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

rathod 2 - 2026

அவர் கூறும்போது, சினிமாவில் பெரிய ஆளாகிவிட வேண்டும் என்ற கனவில் 2008 ஆம் ஆண்டில் மும்பை வந்தேன். அப்போது எனக்கு டீன் ஏஜ் வயது. வாய்ப்புக்காக ஒரு தயாரிப் பாளரைச் சந்தித்தேன்.

அவருக்கு 65 வயது இருக்கும். என்னிடம், நான் உன்னில் ஒருவனாக இருக்கிறேன் என்றார். எனக்குப் புரியவில்லை. பிறகு எனது மேலாடையை கழற்றச் சொன்னார். நான் நடுங்கிவிட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.

rathod - 2026

பிறகு எனக்கு வாய்ப்பே வேண்டாம் என்று அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். அந்த தயாரிப்பாளர் யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்ட நடிகை மஹ்லாரின் இந்தப் பாலியல் புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.