December 6, 2025, 12:01 PM
29 C
Chennai

முகமறியா சோசியல் மீடியா பழக்கம்! 12,568 பேர் முகங்களை சிதைத்து விட்டதாம்!

violence women1 - 2025

கடந்த 2018ம் ஆண்டில் நாட்டில் நடந்த பாலியல் பலாத்கார குற்றங்களில் 12,568 சம்பவங்கள், சமூக வலைதளங்களின் மூலம் பெண்களுக்கு நண்பராகும் ஆண்களால் நடந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய குற்றவியல் ஆவண காப்பகம், நாட்டில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரித்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை இந்த காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 33,356 பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தினமும் சராசரியாக 89 பலாத்காரங்கள் நடந்துள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டில் 32,559 ஆக இருந்தது.

கடந்த 2016ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 38,947 என்ற உச்சத்தில் இருந்தது.

2018ம் ஆண்டில் 72.2 சதவீதம் அளவுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களும், 27.8 சதவீதம் அளவுக்கு 18 வயதுக்கும் குறைந்த பெண்களும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டனர். இதில் 16 வயது முதல் 18 வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 4779. மேலும், 12 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை 3,616. 6 முதல் 12 வயதுள்ள சிறுமிகள் 757 பேர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

6 வயதுக்கும் கீழ் உள்ள சிறுமிகள் 281 பேர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குறிப்பிட்ட ஆண்டில் பலாத்கார வழக்குகள் அதிகளவு பதிவான மாநிலங்களில் முதலிடம் வகிப்பது மத்திய பிரதேசம்.

இங்கு, 5,433 பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 2ம் இடத்தை ராஜஸ்தான் பெற்றுள்ளது. இங்கு 4,335 பலாத்காரங்கள் நடந்துள்ளன.

உத்தர பிரதேசத்தில் 3946, மகாராஷ்டிராவில் 2142, சட்டீஸ்கரில் 2091, கேரளாவில் 1945, அசாமில் 1648, டெல்லியில் 1215, அரியானாவில் 1296 பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகியவை இதற்கு அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

நாட்டில் மொத்தம் நடைபெற்றுள்ள 33,356 பலாத்கார சம்பவங்களில் 15,972 சம்பவங்களில் குடும்ப நண்பர்கள், பக்கத்து வீட்டினர், ஊழியர்கள் அல்லது பிற தெரிந்த நபர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 12,568 சம்பவங்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களாகும் ஆண்களாலும்.

நாகரீகம், தைரியம் என்ற பெயரில் திருமணம் செய்யாமல் ஆண்களுடன் ஒரே அறையில் தங்கும் பெண்களுக்கும் நடந்துள்ளன. 2036 பலாத்கார சம்பவங்கள் மட்டும் தெரியாத நபர்களால் நடைபெற்றுள்ளன. மேலும், 100 பலாத்கார சம்பவங்களில் 94 சம்பவங்கள் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு தெரிந்த நபர்களால்தான் நடைபெற்றுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories