ஒருத்தீ யின் மூலம் ஆசை தீ நிறைவேறும்: நவ்யா நாயர்!

சினி நியூஸ் சினிமா
navlya nayar - 2026

கடந்த பத்தாண்டுகளுக்கு முன், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்தவர் நவ்யா நாயர்.

பின், அவர் சந்தோஷ் மேனன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு, திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தவர், திடுமென, மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

navya - 2026

மலையாளத்தில், வி.கே.பிரகாஷ் என்பவர் இயக்கத்தில் ஒரு தீ என்ற படம் எடுக்கப்படவிருக்கிறது. இந்தப் படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில், நவ்யா நாயர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான முதல்பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

manchu wariyar - 2026

இது குறித்து, நடிகை நவ்யா நாயர் கூறியிருப்பதாவது: குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டாலும், நல்ல கதையம்சம் உள்ள படம் கிடைத்தால், அதில் நடிக்கும் ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது.

தீ படத்தின் மூலம், கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த ஆசைத் தீக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சினிமாவில், தீ படத்தின் மூலம் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை துவக்குகிறேன். அதில் வெற்றி பெறுவேன் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.