லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

சினி நியூஸ் சினிமா
nakshtra 1 1 - 2026

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான நட்சத்திரா. தன் திறமையால் படிப்படியாக வளர்ந்து பிரபலங்கள் நேர்காணல், கலைநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என முன்னேறி வந்தார்

இந்நிலையில் ராதிகாவின் “வாணி ராணி’ தொடரில் ருத்ரா என்கிற சிறிய வில்லி கேரக்டர் அவருக்கு அரிதாரம் பூச, தற்போது, குஷ்பு சுந்தர்.சியின் “லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடரில் நடிகையாகிவிட்டார்.

nakshtra nakesh - 2026

இதற்கிடையில் “கனா காதல்’, “என் இனிய பொன் நிலாவே’, “தோட்டாக்கள் பூவாச்சு’, “ஏனோ வானிலை மாறுதே’, “இவள் அழகு’, “கூடல்’, “ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்’ போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். நட்சத்திராவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,

nakshthra - 2026

தற்போது வெள்ளித்திரையில் “வணிகன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக களம் இறங்கியிருக்கிறார். நட்சத்திரா முழுப்பெயர் நட்சத்திரா நாகேஷ். இவர், இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி & அப்ளைட் நியூட்ரிஷனில் பட்டயப் படிப்பை முடித்துள்ளார். இசை கேட்பது அவருடைய மெயின் பொழுது போக்கு.

nakshtra - 2026

“லட்சுமி ஸ்டோர்’ தொடரில் நடிப்பது குறித்து கூறும் போது, “”எனக்கு ரொம்ப அருமையான கேரக்டர். நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருக்கிறது. இந்த கேரக்டரில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை நம்பி இவ்வளவு பெரிய கேரக்டரை கொடுத்த குஷ்பு மேடத்துக்கும், சுந்தர் சி. சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.