தலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா!

சினி நியூஸ் சினிமா
thalavi 1 - 2026

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இயக்குநர் விஜய், “தலைவி” என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார். இவர் தமிழில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக “தாம்தூம்” படத்தில் நடித்தவர் ஆவார்.

thalivi 1 - 2026

எம்ஜிஆர் பிறந்த நாளின்போது வெளியான அரவிந்த் சாமியின் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த போஸ்டரில் கங்கனாவின் தோற்றம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில், அதிமுக கொடி நிறத்தில் பார்டர் போட்ட சேலை அணிந்துள்ளார் கங்கனா ரனவத்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.