எச்சரிக்கை! இன்று முதல்… பத்திரப்பதிவுக்கு சாட்சியா போனீங்கன்னா… மாட்டிக்குவீங்க!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
sub registrar - 2026

தமிழகத்தில் 575 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன! இதன் மூலம் வீடு விளைநிலம் உள்ளிட்ட சொத்துப் பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன!

இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் பெறப்படுகின்றன! ஆனால் இதுநாள் வரை சாட்சிகளிடம் புகைப்படம் கைரேகை பதிவு பெறப்படாமல், அவர்களிடமிருந்து கையெழுத்து மட்டுமே பெறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இடைத்தரகர்கள் பத்திரப்பதிவுக்கு சாட்சியாக தாங்கள் ஏன் சிலரை அழைத்து வருகின்றனர். அவர்களையே சாட்சிகளாக பல்வேறு இடங்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அதில் இடைத்தரகர்கள் அழைத்துவரும் சாட்சியங்களை அனைத்து பத்திரப்பதிவுகளிலும் கையெழுத்துப் போட்டு வந்தனர்.

இதனால் சில நேரங்களில் பத்திரப்பதிவில் மோசடி நடை பெறுவது தவிர்க்க முடியாததாகி உள்ளது. இந்த நிலையில் இது போன்ற மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரே நபர் அனைத்து ஆவணங்களின் சாட்சியாக கையெழுத்து போடுவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறை கொண்டுவர பதிவுத் துறை ஐஜி ஜோதி நிர்மலா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று முதல் ஒரே நபர் சாட்சியாக ஆறு ஆவணங்களில் மட்டுமே சேர்க்க முடியும்! ஆறு ஆவணங்களுக்கு மேல் ஒரே நபர் சாட்சியாக வந்தால் மாவட்ட பதிவாளர் ஐடிக்கு அனுப்பப்படும். அவர் அனுமதி அளித்தால் மட்டுமே ஆவணப்பதிவு தொடரமுடியும்.

ஆவணத்தில் சாட்சியாக வருபவர்கள் புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயம் பெறப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் பத்திரப்பதிவு மோசடி நடைபெற்று சாட்சி களையும் அதில் சேர்க்க முடியும் இதற்காக கைரேகை மற்றும் புகைப்படம் இதன் மூலம் ஆவணப் பதிவு தடுக்கப் படுவது மட்டுமன்றி ஒரே நபர் அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்து இடுவதும் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.