அந்த நடிகரின் கன்னத்தை சாப்பிட விருப்பம் கொண்ட நடிகை!

சினி நியூஸ் சினிமா
huma qureshi

பாலிவுட் நடிகர் வருண் சர்மா லாக்டவுனால் வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, சட்னியுடன் மோமோஸ் சாப்பிட வேண்டும் போன்று இருக்கிறது. மோமோஸ் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிறது. எனக்கு மோமோஸ் சாப்பிட ஆசையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

வருண் சர்மாவின் வீடியோவை பார்த்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியோ, எனக்கு உங்களின் கன்னங்களை சாப்பிட வேண்டும் போன்று இருக்கிறது என்று கமெண்ட் போட்டுள்ளார்.

ஹூமாவின் கமெண்ட்டை பார்த்தவர்கள், என்னம்மா இப்படி சொல்லிட்டீங்களேம்மா என்று கேட்டுள்ளனர். வருணின் கன்னங்கள் மோமோஸ் போன்று புஸ்ஸென்று இருப்பதால் ஹூமாவுக்கு சாப்பிட ஆசை வந்திருக்கும் என்று சிலர் கமெண்ட் போட்டுள்ளனர்.

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஹூமா குரேஷி பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக ஹூமா தான் நடிக்கிறார் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.