பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

சினி நியூஸ் சினிமா
sushil

திரைத்துறையில் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சுஷீல் கவுடாவை அந்தபுரா என்ற தொடர் மக்களிடம் பிரபலமடையச் செய்தது. நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்.

30 வயதாகும் இவர் மாண்டியாவில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.