தினமும் உண்ணுங்கள் நேத்திரம்! ஆரோக்கியம் நிச்சயம்!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
neethram pazham

இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும். உடல் மெலிந்தவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும்.

அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். துண்டுகளாக்கிய பழத்தை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும். பின்பு இதனுடன் நெய்யை கலந்து 48 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்தவர்கள் திடகாத்திரத்துடன் உடல் எடை கூடுவார்கள்.

நேந்திரன் மூளையின் செல்களுக்கு வலுவூட்டி நினைவுகள் சிதறாமல் பாதுகாப்பதாக ஆராய்ந்து தெரிந்துள்ளார்கள். சிப்ஸ், ஜாம், வற்றல் சுவையாக இருக்கும் என்று அளவுக்கு அதிகமாக உண்டால் மந்தம் ஏற்படும். இதனை பழமாக சாப்பிட்டால் தான் முழு பலனையும் பெற முடியும். எனவே பழமாக சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியம் பெறுங்கள்.

பழுத்த நேந்திரம் பழத்தையும்,மிளகு தூளையும் கலந்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

நேந்திரம் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதய தசைகள் வலுவடையும். தினமும் நேந்திரப்பழத்தை சாப்பிட்டு வருவதனால் இதய நோயிலிருந்து விடுபடலாம். இதயம் சீராக செயல்படுவதற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நேந்திரம் பழத்தில் உள்ளன.

நேந்திரம் பழத்தில் உடல் சூட்டினைக் குறைத்து குளிர்ச்சியை அதிகப்படுத்தும் சத்துக்கள் இருக்கின்றன. ஒல்லியானவர்கள் நேந்திரம் பழத்தை அவித்து சாப்பிடுவதனால் உடல் எடை நன்கு அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்தும்.
நாம் நேந்திரம் பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.

நேந்திரம் பழத்தை தினசரி உண்டு வருவதனால் சருமத்தைப் பாதுகாப்பதுடன்,சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும். நேந்திரம் பழம் நமது உடலுக்கு தேவையான பொட்டசியச் சத்தை அதிகம் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.