வீட்டுக்கு திரும்பி வந்த மகன்! மகிழ்ச்சியில் விஜய் குடும்பம்!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
vijay-and-his-son
  • அப்பாடா…! பல மாதங்களுக்குப் பிறகு ஹீரோ விஜய்யின் மகன் ஜாஸோன் சஞ்சய் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
  • அதனால் ஹீரோ குடும்பத்தில் திருவிழாக் கோலம்.

பல மாதங்களுக்கு பிறகு விஜய்யின் மகன் ஜாஸோன் சஞ்சய் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்த தோடு சிறியதாக ஒரு ஃபங்ஷன் கூட கொண்டாடினார்கள்.

மேல்படிப்புக்காக கனடாவுக்குச் சென்ற ஜாஸோன் சஞ்சய் கொரோனா பரவலால் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டார். எங்கும் லாக்டௌன் விதித்ததால் வெளிநாடுகளிலிருந்து விமானங்களை நிறுத்தி வைத்திருந்ததால் அங்கேயே இருக்கும்படி ஆயிற்று. அதனால் விஜய் அவரைப் பற்றிய கவலையில் இருந்ததாக அப்போது செய்திகள் வந்தன.

லாக்டௌன் தளர்த்தியதில் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அண்மையில் நம் நாட்டுக்கு திரும்பியபோது ஜாஸோன் கூட வந்தார். ஆனால் அரசாங்க நிபந்தனைகளின்படி 14 நாட்கள் ஒரு ஹோட்டலில் குவாரன்டைனில் இருந்தார். அது பூர்த்தியானவுடன் ஜாஸோன் அண்மையில் வீட்டுக்கு திரும்பி வந்தார். இதனால் விஜய் குடும்பம் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.