body-in-rain

வாரங்கல் எம்ஜிஎம் மருத்துவமனை வளாகத்தில் திங்கள் அன்று மதியம் இரண்டரை மணிக்கு ஸ்ட்ரெச்சர் மீது ஒரு பெண்ணின் இறந்த உடல் ஹோவென்று கொட்டிக் கொண்டிருந்த மழையில் நனைந்து கொண்டிருந்தது.

காரணம் என்ன என்று பார்த்த போது… கொரோனா அச்சத்தினால் அவ்வாறு விட்டுவிட்டார்கள் என்று தெரிந்தது.

ஹன்மகொண்டாவைச் சேர்ந்த 65 வயது பெண்மணி உடல்நிலை சரியின்றி ஹைதராபாதில் கோவிட் பரிசோதனை செய்து கொண்டார். நெகட்டிவ் என்று வந்ததால் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஹனுமகொண்டாவுக்கு அழைத்து வந்தார்கள்.

திங்கள் அன்று மதியம் 2 மணிக்கு அவர் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட போது குடும்பத்தினர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதற்குள்ளாகவே அந்தப் பெண்மணி இறந்து விட்டார் என்று கூறியதால் இறந்த உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனையை விட்டு வெளியில் எடுத்து வந்தார்கள்.

அதற்குள்ளாகவே பெரு மழை பெய்ததால் குடும்ப அங்கத்தினர்கள் இறந்த உடலை விட்டுவிட்டு அருகிலிருந்த ஷெட்டுக்குள் ஓடி தம்மைக் காத்துக் கொண்டார்கள். அரை மணிக்கு மேலாக மழை பெய்து ஓயும் வரை இறந்த உடல் அங்கேயே நனைந்து கொண்டிருந்தது.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

கோவிட் இருக்குமோ என்னவோ என்ற சந்தேகத்தால் ஓரத்தில் தாம் ஒதுங்கியபோது உடலையும் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்வதற்கு குடும்ப அங்கத்தினர்கள் முன்வரவில்லை என்றும் மழை நின்றவுடன் ஆம்புலன்சில் ஏற்றி நேராக மயானத்திற்கு அழைத்துச் சென்றார்கள் என்றும் அங்கிருந்த போலீசார் தெரிவித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending