karur-pasumaikkudi
karur-pasumaikkudi

தற்சார்பு வாழ்வியலை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக நாட்டு காய்கறி விதைகள் மூலம் வீடு தோறும் காய்கறி தோட்டம் அமைத்து மக்கள் நஞ்சில்லா உணவு நோயில்லா வாழ்வு வாழ பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் மூலமாக ஏற்கனவே ஒரு ஊரில் மட்டும் செயலாக்கி இருந்த விதை பயணம் ஒரு ஊராட்சி தோறும் உள்ள ஊர்களுக்கு கொடுத்து வருகிறோம் ..

இன்று 21 ஜூலை 2020 வரவனை ஊராட்சியில் 1700 குடும்பத்திற்கு காய்கறி மற்றும் முருங்கை விதைகள் கொடுக்கும் பணி துவங்கி ஒவ்வொரு கிராமமாக கொடுத்து வருகிறோம்… இதுவரை,

  1. கரூர் மாவட்ட ஆசிரியர்கள் 700 பேருக்கு நாட்டு காய்கறி விதைகள், முருங்கை விதைகள்
  2. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 300 குடும்பங்களுக்கு விதைகள்
  3. அரவக்குறிச்சியில் 100 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் முருங்கை விதைகள்
  4. கர்நாடகா மாநிலம் கோலார் தங்கவயலில் 100 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் முருங்கை விதை
  5. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 100 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் முருங்கை விதை
  6. இணைந்த கைகள் மூலம் 500 குடும்பங்களுக்கு விதைகள்
  7. அரவக்குறிச்சியில் தோட்டம் அமைக்கும் ஒருவருக்கு மிளகாய் 2 கிலோ, வெண்டை 1 கிலோ, புடலை ,பூசணி மற்றும் பாகற்காய் 250 கிராம் , கீரை 2 கிலோ விதைகள் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு தோட்டம் மட்டுமல்லாது தோட்டம் அமைக்க விரும்பியவர்களுக்கும் விதைகள் கொடுக்கப்பட்டது.
ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

இந்த ஆண்டு பசுமைக்குடி முயற்சியில் மொத்தத்தில் இது வரை 3500 குடும்பங்களுக்கு விதைகள் மற்றும் ஒரு தோட்டம் அமைக்க விதைகள் கொடுக்கப் பட்டதாகக் கூறுகின்றனர்.

விதைகளே பேராயுதம்: கோ. நம்மாழ்வார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending