இராஜஸ்தான் ஸ்பெஷல்: எவரும் செய்யலாம் கேவர்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kelari - 2026

கேவர்

தேவையானவை:
மைதா மாவு – 2 கப்
நெய் – கால் கப் (மாவு கரைக்க)
தண்ணீர் – ஒரு கப்
ஐஸ் வாட்டர் – தேவையான அளவு
ஐஸ் க்யூப்ஸ் – 10
காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
நெய் – பொரிக்கத் தேவையான அளவு

பாகு செய்ய:

சர்க்கரை – ஒரு கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
தண்ணீர் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

அலங்கரிக்க:


துருவிய பாதாம், பிஸ்தா – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
வெள்ளித்தாள், செர்ரி பழத் துண்டுகள், குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் நெய் சேர்த்து கை விரல்களால் நன்கு கலக்கவும். அதனுடன் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து 10 நிமிடங்கள் தேய்க்கவும். மேலே மிதக்கும் ஐஸ் கட்டிகளை எடுத்துவிட்டு, மீண்டும் தேய்க்கவும். பிறகு மைதா மாவு, பால், ஐஸ் வாட்டர், தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து  கைவிடாமல் ஆப்ப மாவு பதத்துக்குக் கரைக்கவும். இறுதியாக எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

குழிவான நான் ஸ்டிக் பானில் (pan) நெய்விட்டுச் சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து அரை கரண்டி மாவை எடுத்து, கரண்டியை மேலே தூக்கி பிடித்தவாறு நெய்யில் ஊற்றவும். இது சலசலவெனப் பொரிந்து பொங்கி வரும். சலசலப்பு அடங்கியதும் மீண்டும் ஒரு கரண்டி மாவை எடுத்து அதேபோல ஊற்றவும்.

இதுவும் பொங்கி அடங்கி பிரவுன் கலராக வந்ததும் எண்ணெயை வடித்து ஒரு தட்டில் வைக்கவும். இதே போல மீதமுள்ள மாவையும் தயாரிக்கவும். பாகு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து 2 கம்பி பதத்தில் பாகு காய்ச்சி இறக்கவும். பொரித்த கேவர்களைத் தட்டில் அடுக்கி. அதன்மீது சர்க்கரை பாகு ஊற்றி, அலங்கரிக்க கொடுத்துள்ள பொருள்களைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்

தை நெய்யில்தான் செய்ய வேண்டும். சூடான நெய்யின் மத்தியில்தான் மாவைத் தூக்கி ஊற்ற வேண்டும். இதற்கு ராஜஸ்தானில் ஒரு அச்சு கிடைக்கிறது. அது இல்லாதவர்கள் நான் ஸ்டிக் பேனில் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.