இதுதான் சிம்பு மாஸ்.. ஒரே ஒரு புகைப்படம்.. அதிரும் இணையதளம்…

Published:

simbu

குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 32 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. 

மேலும், அதே வேகத்தில் பல மாதங்களாக கிடப்பில் கிடந்த ‘மாநாடு’ படத்திலும் நடிக்கப் போய்விட்டார். இது சிம்பு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஒருபக்கம், மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு சிம்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வருகிற 21ம் தேதி காலை 10.44 மணிக்கு வெளியாகும் என  படக்குழு அறிவித்துள்ளது. மேலும், கலவரங்களுக்கு இடையே சிம்பு தொழுகை செய்வது போல் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சிம்பு இஸ்லாமியராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்த புகைப்படம் சிம்பு ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

 
Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img