பிரபுதேவா ரகசிய திருமணம் செய்தது யாரை தெரியுமா? – கசிந்த தகவல்

Published:

prabudeva

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பலவேறு திறமைகள் கொண்டவர் பிரபுதேவா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில், வில்லு படத்தை இயக்கும் போது நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 

அவரை திருமணம் செய்வதற்காக மனைவியை விவாகரத்தும் செய்தார். ஆனால், நயனுடன் அவருக்கு திருமணமும் ஆகவில்லை.

இந்நிலையில், தனியாக வசித்து வந்த அவர் ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. தற்போது அப்பெண்ணை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது. அப்பெண் பீகாரை சேர்ந்த பிசியோதெரபி மருத்துவர் எனவும், பிரபு தேவாவுக்கு சிகிச்சை அளித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது வரை பிரபுதேவா இதுபற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img