சிம்புவுடன் நடிக்க நடிகைகள் தயங்கினார்களாம். இதனை ஆகிய மைக்கேல் ராயப்பன் கடிதம் ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் சிம்புவுடன் நடிக்க நடிகைகள் விரும்பவில்லை. நடிகைகளுக்கு சிம்புவை பிடிக்காது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்தான் இப்படி தெரிவித்துள்ளார்.
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் நஷ்டம் அடைந்ததற்கு காரணம் சிம்பு என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் மைக்கேல் ராயப்பன். அவர் இது குறித்த கடிதம் ஒன்றினை வெளியிட்டு, அந்தக் கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும்… “எந்த ஒரு நடிகையும் கதாநாயகியாக சிம்புவுடன் நடிக்க தயாராக இல்லை. முதலில் த்ரிஷா நடிக்க வாங்கிய முற்பணத்தையும் தொகையை திருப்பி தந்துவிட்டார். லட்சுமி மேனனை கொச்சினில் சந்தித்து இது குறித்த கேட்ட போது அவரும் மறுத்துவிட்டார். கடைசியில் ஸ்ரேயா ஒப்புக் கொண்டார்.
முதல் நிகழ்ச்சிநிரல் முடிந்த பிறகு அதே தோற்றத்தில் பாடல் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் ஸ்ரேயா சரியில்லை. அதனால் அவரை நீக்கிவிட்டு திரும்பவும் படப்பிடிப்பு நடத்தலாம் என்றார். அவர் ஸ்ரேயாவுடன் மீண்டும் நடிக்க விரும்பாத காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.
கடைசியாக மூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு விரும்பவில்லை இதனால் அவர் வரவில்லை. ஒரு வழியாக இயக்குநர் கதறி அழுது ஒரு மணி நேரம் தாருங்கள் 8 காட்சிகள் தான் என்று கேட்ட பின்னர் என் வீட்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அதன்படி எடுத்தோம்… என மைக்கேல் ராயப்பன் அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



